பாலிகாசியாவோ கரிச்சான்

பாலிகாசியாவோ கரிச்சான் (Balicassiao) என்பது டைக்ரூரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

பாலிகாசியாவோ கரிச்சான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. balicassius
இருசொற் பெயரீடு
Dicrurus balicassius
(Linnaeus, 1766)
வேறு பெயர்கள்

Corvus balicassius Linnaeus, 1766

பாலிகாசியாவோ கரிச்சானின் இயற்கை வாழிடம் என்பது மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.

விளக்கம் தொகு

பாலிகாசியாவோ கரிச்சான் நடுத்தர அளவிலான பறவை ஆகும். ஆண் பெண் பாலின வேறுபாடின்றி ஒரே மாதிரியாகக் காணப்படும். இன வேறுபாடு அளவில் காணப்படுகின்றது.

வகைப்பாட்டியல் தொகு

1760ஆம் ஆண்டில் பிரான்சு விலங்கியல் நிபுணர் மாத்துரின் ஜாக் பிரிசன் பிலிப்பீன்சில் சேகரிக்கப்பட்ட ஒரு மாதிரியின் அடிப்படையில் தனது பறவையியல் நூலில் பாலிகாசியாவோ பற்றிய விளக்கத்தைச் சேர்த்தார். இவர் பிரெஞ்சு பெயரான Le choucas des Philippines மற்றும் இலத்தீன் மோனெடுலா பிலிப்பென்சிசு ஆகியவற்றைப் பயன்படுத்தினார். பிரிசன் இலத்தீன் பெயர்களை உருவாக்கினாலும், இவை இருசொற் பெயரிட்டு அமைப்புடன் ஒத்துப்போகவில்லை மற்றும் விலங்கியல் பெயரிடலுக்கான பன்னாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்படவில்லை.[2] 1766ஆம் ஆண்டில் சுவீடன் இயற்கை ஆர்வலர் கரோலஸ் லின்னேயஸ் தனது சிஸ்டமா நேச்சுராவை பன்னிரண்டாவது பதிப்பிற்காகப் புதுப்பித்தபோது, இவர் முன்பு பிரிசனால் விவரிக்கப்பட்ட 240 சிற்றினங்களைச் சேர்த்தார். இவற்றில் ஒன்று பாலிகாசியாவோ ஆகும். லின்னேயஸ் ஒரு சுருக்கமான விளக்கத்தை உள்ளடக்கி, கோர்வசு பாலிகாசியசு என்ற இருமப் பெயரை உருவாக்கி, பிரிசனின் படைப்புகளை மேற்கோள் காட்டினார். இந்த பறவையின் குறிப்பிட்ட பெயர் பாலிகாசியோ, செபுவானோ வார்த்தையிலிருந்து வந்தது.[3] இந்த சிற்றினம் இப்போது 1816ஆம் ஆண்டில் பிரான்சு பறவையியலாளர் லூயிஸ் பியர் வியெல்லட் அறிமுகப்படுத்திய டைக்ரூரசு சிற்றினத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Dicrurus balicassius". IUCN Red List of Threatened Species 2016: e.T22706993A94101710. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706993A94101710.en. https://www.iucnredlist.org/species/22706993/94101710. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Joel Asaph Allen (1910). "Collation of Brisson's genera of birds with those of Linnaeus". Bulletin of the American Museum of Natural History 28: 317–335. 
  3. Jobling, J.A. (2018). del Hoyo, J.; Elliott, A.; Sargatal, J.; Christie, D.A.; de Juana, E. (eds.). "Key to Scientific Names in Ornithology". Handbook of the Birds of the World Alive. Lynx Edicions. பார்க்கப்பட்ட நாள் 20 June 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிகாசியாவோ_கரிச்சான்&oldid=3945065" இலிருந்து மீள்விக்கப்பட்டது