பாளையக்காரர் போர்கள்

18 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் ஆதிக்கத்தை நிலை நாட்டிய ஆங்கிலேயர், பாளையக்காரர்களை நசுக்கியும், குடிமக்கள்மீது வரிச்சுமையை ஏற்றியும் பெரும் அதிருப்தியைச் சம்பாதித்தனர். இதன் பின்னணியில் ஏற்பட்ட மோதல்களே பாளையக்காரர் போர்கள்.

வரலாற்றுப் பின்னணி தொகு

1736 ஆம் ஆண்டில் கர்நாடகத்தை ஆண்டு வந்த நவாபான சந்தாசாகிபு, மதுரை நாயக்க அரசில் ஏற்பட்ட அரசுரிமைப் போட்டியைப் பயன்படுத்திக்கொண்டு, மதுரை நாயக்கர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்ததுடன் தமிழ்நாட்டின் தென்பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டான். இதனால் இப்பகுதிகளுள் அடங்கியிருந்த பாளையப்பட்டுகள் அனைத்தும் கர்நாடக நவாபின் மேலாண்மைக்குள் அடங்கின.

பதினெட்டாம் நூற்றாண்டின் பின்னரையில் கர்நாடக, தஞ்சை அரசுகளுக்கு உதவியாளர்களாகவும், மத்தியஸ்தர்களாகவும் ஆங்கிலேயர் தமிழக அரசியலில் தலையிட்டு வந்தனர். மன்னர்களைக் கைக்குள் போட்டுக்கொண்ட அவர்கள் மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்த பாளையக்காரர்கள் தங்கள் நோக்கங்களுக்குத் தடையாக இருக்ககூடும் எனக் கருதியதால், அவர்களை அடிபணியச் செய்வதில் முனைப்புக்காட்டி வந்தனர். பலர் அடிபணிந்தாலும், வேறுசிலர் இம்முயற்சிகளுக்கு எதிர்ப்புக் காட்டியே வந்தனர். நெற்கட்டுச் செவல் பாளையக்காரன் புலித்தேவனை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். சந்தர்ப்பங்கள் வாய்த்தபோதெல்லாம் பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயற்பட்டு வந்ததை வரலாறு காட்டுகின்றது.

1792 இல், தஞ்சை, கர்நாடக அரசுகளிடையே இருந்த பகைமையையும், கர்நாடக நவாபின் வலிமை இன்மையையும் பயன்படுத்திக்கொண்டு, கர்நாடக நவாபுடன் செய்துகொண்ட உடன்படிக்கைப்படி தமிழ்நாட்டின் தென்பகுதி மீது ஆங்கியேயர் ஆதிக்கம் ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு ஆங்கிலேயர் பாளையக்காரர்களைப் பழிவாங்கினர். அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுப் பாளையங்களை ஒடுக்கினர். இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து ஆங்கிலேயரைத் துரத்துவதற்குச் சில பாளையக்காரர்கள் திட்டமிட்டனர்.

புரட்சிக் கூட்டிணைப்புகள் தொகு

ஆங்கிலேயர் ஆட்சி மக்கள்மீதும் அடக்குமுறைகளை ஏவிவிட்டது. தங்களுடைய வணிக நோக்கங்களுக்காக, உள்நாட்டுத் தொழில்களை ஆங்கிலேயர் முடக்கினர் இதனால் மக்கள் வறுமையில் வாடினர். ஆனாலும் இதுபற்றிக் கவனியாது வரிகள் உயர்த்தப்பட்டு, ஈவிரக்கமற்ற முறையில் மக்களிடமிருந்து அவை வசூலிக்கப்பட்டன. இச்சூழ்நிலை ஆங்கிலேய எதிர்ப்புணர்வு கொண்ட பாளையக்காரர்களை ஒன்றுபடுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது. இக்காலத்தில் சில கூட்டிணைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை,

என்பனவாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாளையக்காரர்_போர்கள்&oldid=2750452" இலிருந்து மீள்விக்கப்பட்டது