பாவூர்சத்திரம்

பாவூர்சத்திரம் (Pavoorchatram), தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில், தென்காசியிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது. பாவூர்சத்திரம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், கல்லூரணி ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும். திருநெல்வேலி - செங்கோட்டை செல்லும் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 45 கிமீ தொலைவிலும், தென்காசியிலிருந்து 10 கிமீ தொலைவிலும் பாவூர்சத்திரம் கிராமம் உள்ளது.

பாவூர்சத்திரம்
கிராமம்
பாவூர்சத்திரம் is located in தமிழ் நாடு
பாவூர்சத்திரம்
பாவூர்சத்திரம்
Location in Tamil Nadu, India
பாவூர்சத்திரம் is located in இந்தியா
பாவூர்சத்திரம்
பாவூர்சத்திரம்
பாவூர்சத்திரம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 8°54′52″N 77°22′40″E / 8.91444°N 77.37778°E / 8.91444; 77.37778
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தென்காசி
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

போக்குவரத்து தொகு

தொடருந்து வசதிகள் தொகு

திருநெல்வேலி, சென்னை, கொல்லம், செங்கோட்டை, செல்லும் தொடருந்துகள், பாவூர்சத்திரம் தொடருந்து நிலையம் வழியாகச் செல்கிறது. [1] இதன் அருகமைந்த பெரிய தொடருந்து நிலையம் 10 கிமீ தொலைவில் உள்ள தென்காசி ஆகும். [2]

பாவூர்சத்திரம் ஊரானது திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே நூற்றுக்கணக்கான பேருந்துகள் இவ்வழியில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி மற்றும் தென்காசி நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர கடையம் , பாபநாசம் , அம்பாசமுத்திரம் , அகஸ்தியர் பட்டி , சுரண்டை , சுந்தரபாண்டியபுரம் , ஆலங்குளம் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

புறநகர் பகுதிகளான தூத்துக்குடி , திருச்செந்தூர் , நாகர்கோவில் , கடையநல்லூர் , செங்கோட்டை , புளியங்குடி , வாசுதேவநல்லூர் பகுதிகளுக்கும் கேரள மாநில போக்குவரத்து கழக சார்பிலும் பேருந்துகள் கொல்லம் , கோட்டயம் , பத்தனம்திட்டா , சங்கனாச்சேரி , எர்ணாகுளம் , காயம்குளம் , புனலூர் , கொட்டாரக்கரை பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.

புவியியல் தொகு

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், தூத்துக்குடி - கொல்லம் நெடுஞ்சாலையில், தென்காசி - Tirunelveli இடையே பாவூர்சத்திரம் உள்ளது.

பொருளாதாரம் தொகு

பாவூர்சத்திரத்தின் பொருளாதாரம் வேளாண்மையை நம்பியுள்ளது. பாவூர்சத்திரம் மர அறுவை ஆலைகளுக்கும், மரச் சந்தைக்கும் புகழ்பெற்றது. மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகளில் வெட்டப்படும் தேக்கு, கோங்கு, வாகை போன்ற மரங்கள் அறுக்கப்பட்டு பாவூர்சத்திரத்தில் சந்தைப்படுத்தப்படுகிறது.

அருகமைந்த ஊர்கள் தொகு

கீழப்பாவூர், சுரண்டை, இலஞ்சி, தென்காசி, குற்றாலம், செங்கோட்டை மற்றுு

மேற்கோள்கள் தொகு

  1. பாவூர்சத்திரம் தொடருந்து நிலையம்
  2. தென்காசி தொடருந்து நிலையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவூர்சத்திரம்&oldid=3761293" இலிருந்து மீள்விக்கப்பட்டது