பாவ்லி வினை

பாவ்லி வினை (Pauly reaction) என்பது புரதங்களில் டைரோசின் அல்லது இசுட்டிடின் இருக்கின்றதா என்பதைக் கண்டறிய உதவும் ஒரு வேதிச் சோதனையாகும். இச்சோதனையை முதன் முதலில் கண்டறிந்த செருமானிய வேதியில் அறிஞர் எர்மான் பாவ்லி பெயரால் இவ்வினை அழைக்கப்படுகிறது.[1]. டைரோசின் அல்லது இசுட்டிடினைக் கொண்டுள்ள புரதங்கள், ஈரசோனிய சல்பானிலிக் அமிலத்துடன் காரச்சூழலில் வினைபுரிந்து இணை வினை மூலமாக சிவப்பு நிறம் தோன்றுகிறது [2][3][4][5].

மேற்கோள்கள் தொகு

  1. Pauly, H (1904), "Über die Konstitution des Histidins. I. Mitteilung.", Z. Physiol. Chem., 42: 508–518, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1515/bchm2.1904.42.5-6.508
  2. Debajyoti Das (1980). Biochemistry. Academic Publishers. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80599-17-5.
  3. John Henry Gaddum (1986). Vasodilator Substances of the Tissues. CUP Archive. p. 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-30860-1.
  4. P. M. Swamy (2008). Laboratory Manual on Biotechnology. Rastogi Publications. p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7133-918-1.
  5. Joe Regenstein (28 August 1984). Food Protein Chemistry: An Introduction for Food Scientists. Elsevier. p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-15386-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவ்லி_வினை&oldid=2748444" இலிருந்து மீள்விக்கப்பட்டது