பிசன் சிங் பேடி

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

பிசன் சிங் பேடி (Bishan Singh Bedi, 25 செப்டம்பர் 1946 – 23 அக்டோபர் 2023), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்) ஆவார். இவர் முக்கியமாக இடது-கை வழமைச் சுழல் பந்துவீச்சாளர். 1966 முதல் 1979 வரை இந்திய அணியில் தேர்வுப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் மொத்தம் 67 தேர்வுப் போட்டிகளில் விளையாடி 266 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார். 22 போட்டிகளில் இவர் தேசிய அணியின் தலைவராக விளையாடினார். தவிர, 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர். இவருக்கு 1970 இல் பத்மசிறீ விருதும், 2004 இல் சி. கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.[2] நீண்டகால நோய் காரணமாக 23 அக்டோபர் 2023 அன்று தனது 77ஆவது வயதில் இறந்தார்.[3]

பிசன் சிங் பேடி
B.S. Bedi
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிசன் சிங் பேடி
பிறப்பு(1946-09-25)25 செப்டம்பர் 1946 [1]
அமிருதசரசு, பஞ்சாப் மாகாணம்,
இந்தியா (இன்றைய பஞ்சாப் பகுதி, இந்தியா)
இறப்பு23 அக்டோபர் 2023(2023-10-23) (அகவை 77)
புது தில்லி, தில்லி, இந்தியா
பட்டப்பெயர்பிசு
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைஇடது-கை வழமைச் சுழல்
பங்குபந்து வீச்சாளர்
உறவினர்கள்நேஹா துபியா (மருமகள்)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 113)31 திசம்பர் 1966 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு30 ஆகத்து 1979 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 2)13 சூலை 1974 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப16 சூன் 1979 எ. இலங்கை
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1961–1967வடக்கு பஞ்சாப் அணி
1968–1981தில்லி அணி
1972–1977நார்தாம்ப்டன்சயர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா.ப மு.த ப.அ
ஆட்டங்கள் 67 10 370 72
ஓட்டங்கள் 656 31 3,584 218
மட்டையாட்ட சராசரி 8.98 6.20 11.37 6.81
100கள்/50கள் 0/1 0/0 0/7 0/0
அதியுயர் ஓட்டம் 50* 13 61 24*
வீசிய பந்துகள் 21,364 590 90,315 3,686
வீழ்த்தல்கள் 266 7 1,560 71
பந்துவீச்சு சராசரி 28.71 48.57 21.69 29.39
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
14 0 106 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 0 20 0
சிறந்த பந்துவீச்சு 7/98 2/44 7/5 5/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
26/– 4/– 172/– 21/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 9 நவம்பர் 2014

மேற்கோள்கள் தொகு

  1. "Former India captain and legendary spinner Bishan Singh Bedi passes away at 77". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 October 2023. பார்க்கப்பட்ட நாள் 24 October 2023.
  2. "C.K. Nayudu award for Kapil Dev" (in en-IN). The Hindu. 2013-12-18. https://www.thehindu.com/sport/cricket/ck-nayudu-award-for-kapil-dev/article5474173.ece. 
  3. "Former India captain Bishan Singh Bedi passes away aged 77". Sportstar. 23 October 2023. https://sportstar.thehindu.com/cricket/bishan-singh-bedi-death-passes-away-india-spinner-legendary-cricketer/article67451956.ece. 
  • Robinson, R. (1979) The Wildest Tests, Cassell Australia: Stanmore. ISBN 0 7269 7375 0.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசன்_சிங்_பேடி&oldid=3815505" இலிருந்து மீள்விக்கப்பட்டது