பின் (பௌலிங்)

பௌலிங் விளையாட்டில் பின் (Bowling pin) என்பது, பௌலிங் பந்தினால் அடித்து வீழ்த்தப்படுவதற்கு உரிய குறியாக அமையும் பொருளாகும். பல்வேறு வகையான பௌலிங் விளையாட்டுகளில், பல்வேறு அளவுகளிலும், எண்ணிக்கைகளிலும் பின்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பத்துப்பின் பௌலிங் விளையாட்டில் பயன்படுகின்ற பின்களுக்குரிய அளவுகள் அமெரிக்க பௌலிங் மாநாட்டு அமைப்பினால் (American Bowling Congress) தரப்படுத்தப் பட்டுள்ளன. கூடிய அகலம் கொண்ட பகுதியில் பின்கள் 4.75 அங்குலங்கள் அகலம் கொண்டவையாகவும், 15 அங்குலங்கள் உயரமானவையாகவும் உள்ளன. நிறை 3 இறாத்தல், 6 அவுன்ஸ் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்_(பௌலிங்)&oldid=2019543" இலிருந்து மீள்விக்கப்பட்டது