பிபிசி பாரசீக மொழித் தொலைக்காட்சி

பிபிசி பாரசீக மொழித் தொலைக்காட்சி (பாரசீக மொழி: تلویزیون فارسی بی‌بی‌سی‎ Televizion-e Fârsi-ye BBC) என்பது பிபிசியின் பாரசீக மொழி செய்தித் தொலைக்காட்சி ஆகும். 14 சனவரி 2009 முதல் இந்தத் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது.[1] செய்மதி வழியாக ஒளிபரப்பப்படும் இத்தொலைக்காட்சியானது இணையவழியாகவும் கிடைக்கிறது. ஈரான், ஆப்கானித்தான், தஜிகிஸ்தான், உசுபெக்கிசுத்தான் ஆகிய நாடுகளில் வாழும் பாரசீக மொழியைப் பேசும் சுமார் 120 மில்லியன் மக்களை சென்றடையும் நோக்கில் இந்தத் தொலைக்காட்சி செயல்படுகிறது.

பிபிசி பாரசீக மொழித் தொலைக்காட்சியின் வழங்குனர்கள்: மஜீத் அப்சர், ராணா ரகிம்பூர், 2017

ஈரான் அரசு இச்சேவையின் பணியாளர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் தொல்லைக்கு ஆளாக்கி, அச்சுறுத்தும் செயல்பாடுகள் தொடர்ந்து நடக்கின்றன.[2][3]

வரலாறு தொகு

ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு காமன்வெல்த் அலுவலகம் ஆண்டுதோறும் 15 மில்லியன் பவுண்டு நிதியை ஒதுக்குகிறது.[4] ,[5] இத்தொலைக்காட்சி சார்பற்ற ஊடகமாக இயங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஈரான் நாட்டின் சில ஊடக அமைப்புகள் இந்தத் தொலைக்காட்சியை பிரித்தானிய அரசின் கொள்கைப் பரப்புக் கருவியாக குற்றஞ்சாட்டுகின்றன.[6] ஈரான் அரசு தான் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், ஐயத்திற்குரியதாகவும் சட்டத்திற்குப் புறம்பானதாகவும் இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது. இசுலாமியக் குடியரசின் நலங்களுக்கு எதிராக இந்தத் தொலைக்காட்சி செயல்படுவதாகவும் ஈரான அரசு குற்றஞ்சாட்டுகிறது.[4]

2017 ஆம் ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, பிபிசி பாரசீக மொழித் தொலைக்காட்சியானது 13 மில்லியன் ஈரானிய நேயர்களைக் கொண்டுள்ளது.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "BBC Awaits response to Persian TV". BBC. 2009-01-14 இம் மூலத்தில் இருந்து 20 February 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090220034018/http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/7827574.stm. 
  2. "Iran's threats to BBC Persian staff must be confronted". The Guardian. https://www.theguardian.com/media/commentisfree/2019/mar/17/irans-threats-to-bbc-persian-staff-must-be-confronted. 
  3. "Iran accused of intimidating BBC Persian staff". BBC. https://www.bbc.com/news/world-middle-east-16874177. 
  4. 4.0 4.1 Marrin, Minette (2009-01-14). "Bridging the Persian gulf". The Times (London). http://www.timesonline.co.uk/tol/comment/leading_article/article5512228.ece. 
  5. Foreign and Commonwealth Office; The British Broadcasting Corporation (2006-07-01). "Broadcasting Agreement for the Provision of the BBC World Service" (PDF). BBC/FCO. Archived (PDF) from the original on 5 February 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-01-29.
  6. "Iranian website alleges British government influence in BBC Persian TV". ZIBB. 16 January 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-01-29. [தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Why has Iran imprisoned Nazanin Zaghari-Ratcliffe?". The Economist. 16 November 2017 இம் மூலத்தில் இருந்து 17 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171117080245/https://www.economist.com/news/britain/21731407-jailing-british-citizen-highlights-crackdown-journalists-home-and-abroad-why-has.