பிரசியோடைமியம் ஆர்சனேட்டு

வேதிச் சேர்மம்

பிரசியோடைமியம் ஆர்சனேட்டு (Praseodymium arsenate) என்பது PrAsO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதன் பெரோமின் மாற்ற வெப்பநிலை எனப்படும் நிரந்தர மின் துருவமுனைப்பு மாற்ற வெப்பநிலை அளவு 52 பாகை செல்சியசு வெப்பநிலையாகும்.[1]

பிரசியோடைமியம் ஆர்சனேட்டு
இனங்காட்டிகள்
15479-86-4 Y
ChemSpider 21428531 N
InChI
  • InChI=1S/AsH3O4.Pr/c2-1(3,4)5;/h(H3,2,3,4,5);/q;+3/p-3
    Key: WIIWZOSBVGBHHO-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 25022094
  • [O-][As](=O)([O-])[O-].[Pr+3]
பண்புகள்
PrAsO4
தோற்றம் திண்மம்
கரையாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பிரசியோடைமியம்(III) நைட்ரேட்டு
பிரசியோடைமியம்(III) பாசுப்பேட்டு
பிரசியோடைமியம்(III) ஆண்டிமோனைடு
பிரசியோடைமியம்(III) பிசுமுத்தேட்டு
பிரசியோடைமியம்(III) கார்பனேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் NdAsO4
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு தொகு

சோடியம் ஆர்சனேட்டுடன் (Na3AsO4) பிரசியோடைமியம் குளோரைடு (PrCl3) கரைசலை சேர்த்து வினைபுரியச் செய்தால் பிரசியோடைமியம் ஆர்சனேட்டு தயாரிக்கப்படுகிறது:[2]

Na3AsO4 + PrCl3 → 3 NaCl + PrAsO4

விகிதவியல் அளவுகளில் சூடான நீர்த்த நைட்ரிக் அமிலத்தில் பிரசியோடைமியம்(III,IV) ஆக்சைடு மற்றும் ஈரமோனியம் ஐதரசன் ஆர்சனேட்டு ஆகியவற்றை வினைபுரியச் செய்வதன் மூலமும் இச்சேர்மத்தை தயாரிக்கலாம்:[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Choudhary, R. N. P.. Structural and electrical properties of monoclinic praseodymium arsenic oxide (PrAsO4). Journal of Materials Science Letters, 1991. 10 (8): 432-434. DOI:10.1007/BF00838340
  2. Gabisoniya, Ts. D.; Nanobashvili, E. M.. Synthesis of rare earth metal arsenates. Soobshcheniya Akademii Nauk Gruzinskoi SSR (1980), 97(2), 345-8. பன்னாட்டுத் தர தொடர் எண் 0002-3167