பிரபாவதி தேவி சரஸ்வதி

பிரபாவதி தேவி சரஸ்வதி (Prabhavathi Devi Saraswathi 5 மார்ச் 1905- 14 மே 1972) ஓர் இந்திய வங்காள எழுத்தாளர் மற்றும் புதின எழுத்தாளர் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

பிரபாவதி 1905 இல் பிரித்தானிய இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள வடக்கு 24 பர்கானா மாவட்டம் கோபர்தங்காவில் உள்ள கந்துராவில் பிறந்தார். இவரது தந்தை கோபால்சந்திர பந்தோபாத்யாய். இவர் கிழக்கு வங்காளத்தின் தினஜ்பூரில் ஒரு வழக்குரைஞராக இருந்தார். இவர் ஒன்பது வயதில் பிபூதிபூசன் சௌத்ரியை மணந்தார். பிரம்மா பெண்கள் பயிற்சிக் கல்லூரியில் பயின்றார், அங்கு ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். [1]

தொழில் வாழ்க்கை தொகு

பிரபாவதி கொல்கத்தாவில் உள்ள நகராட்சிப் பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்தார். வடக்கு கொல்கத்தாவில் சாவித்ரி பள்ளியை நிறுவினார். முகமதி, பாரதவர்சா, உபாசனா, பன்சிரி மற்றும் சாரதி போன்ற பத்திரிகைகளில் தனது படைப்புகளை வெளியிட்டார். 1923 இல் தனது முதல் புதினமான பிஜிதாவை வெளியிட்டார். இவரது புதினம் பங்கா கோரா என்ற வங்காளத் திரைப்படமாக வெளியானது. இது 1956 ஆம் ஆண்டு குல தெய்வம் என்ற தமிழ் மொழித் திரைப்படமாகவும், 1957 ஆம் ஆண்டு பாபி என்ற இந்தி மொழித் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. பங்ளர் மேயே என்ற நாடகம் இவரது புத்தகமான பதேர் சேஸை அடிப்படையாகக் கொண்டது. 300க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் வங்காள இலக்கியத்தில் கிருஷ்ணா என்ற முதல் பெண் துப்பறியும் கதை மாந்தரை உருவாக்கினார். பிரதாச்சாரிணி, பயதிதா தரித்ரி, பிதாபர் கதா, துலர் தரணி, ஜாகரன், மஹியாசி நாரி மற்றும் ரப்கா பாவ் ஆகியவை இவரது குறிப்பிடத்தகுந்த படைப்புகளில் அடங்கும். ஜாம்செட்பூர் அகில இந்திய வங்காள இலக்கிய சங்கத்தின் இயக்குநராக இருந்தார். 1946 இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தால் லீலா விருது இவருக்கு வழங்கப்பட்டது. நவத்வீப் இசுகாலர்ஸ் சமூகத்தால் இவருக்கு சரஸ்வதி விருது வழங்கப்பட்டது. [2]

இறப்பு தொகு

பிரபாவதி 1972 மே 14 இல் இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவில் இறந்தார். [1]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Hasnat, Abul. "Saraswati, Prabhavati Devi" (in ஆங்கிலம்). Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 13 November 2017.Hasnat, Abul. "Saraswati, Prabhavati Devi". en.banglapedia.org. Banglapedia. Retrieved 13 November 2017.
  2. Dhananjayan, G. (2014) (in en). Pride of Tamil Cinema: 1931 TO 2013: Tamil Films that have earned National and International Recognition. Blue Ocean Publishers. பக். 118. https://books.google.com/books?id=e07vBwAAQBAJ&dq=Prabhavathi+Devi+Saraswathi&pg=PA118. பார்த்த நாள்: 13 November 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபாவதி_தேவி_சரஸ்வதி&oldid=3829611" இலிருந்து மீள்விக்கப்பட்டது