பிரப் நினைவாலயம்

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு கிறித்தவக் கோயில்

பிரப் நினைவாலயம்[1][2] அல்லது சி. எஸ். ஐ. பிரப் நினைவாலயம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு மாநகரில் அமைந்துள்ள ஒரு தென்னிந்தியத் திருச்சபை ஆகும்.[3] ஆஸ்திரேலியாவின் சவுத் வேல்ஸ் பகுதியின் ஒரு கிறித்தவ மத போதகரான Rev. அந்தோணி வாட்சன் பிரப் என்பவரால் கி. பி. 1930ஆம் ஆண்டு இத்திருத்தலம் உருவாக்கப்பட்டது.[4] பிரப், ஈரோடு மாவட்டத்தில் 1897 முதல் 1933 வரை கிறித்தவ மத போதகராக சேவைகள் செய்து வந்தார்.

பிரப் நினைவாலயம்
சி. எஸ். ஐ. பிரப் நினைவாலயம்
சி. எஸ். ஐ. பிரப் நினைவாலயம், ஈரோடு
11°20′19″N 77°43′34″E / 11.338701°N 77.726119°E / 11.338701; 77.726119
அமைவிடம்மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு, தமிழ்நாடு
நாடு இந்தியா
சமயப் பிரிவுசி. எஸ். ஐ.
வலைத்தளம்[1]
வரலாறு
நிறுவனர்(கள்)Rev. அந்தோணி வாட்சன் பிரப்
நேர்ந்தளித்த ஆண்டு1930
Architecture
நிலைதிருத்தலம்
செயல்நிலைபயன்பாட்டிலுள்ளது
கட்டடக் வகைகிறித்தவத் தேவாலயம்
பாணிஇந்தோ சரசனிக் பாணி
நிருவாகம்
பங்குதளம்ஈரோடு
உயர் மறைமாவட்டம்கோவை மறைமாவட்டம்

அமைவிடம் தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 191.95 மீட்டர்கள் (629.8 அடி) உயரத்தில், (11°20′19″N 77°43′34″E / 11.338701°N 77.726119°E / 11.338701; 77.726119) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, ஈரோடு மாநகரின் மீனாட்சி சுந்தரனார் சாலை (இதற்கு முன்னர் பிரப் சாலை (முந்தைய ஈரோடு நகராட்சி உறுப்பினராக இருந்த பிரப் என்பவரின் நினைவாக சாலையின் பெயர்))[5][6] சந்திப்பில் பன்னீர் செல்வம் பூங்கா அருகில் இத்தேவாலயம் அமையப் பெற்றுள்ளது.

விபரங்கள் தொகு

இந்த தேவாலயமானது, உரோமானிய மற்றும் கோத்திக் கலைகளின் கலவை கொண்ட முன்பக்கம், சிற்ப நுணுக்கங்கள், நேர்த்தியான தோரண வாயில்கள் ஆகியவற்றுடன் சிறப்புற விளங்குகிறது.[7]

ஒவ்வோர் ஆண்டும், ஆங்கிலப் புது வருடம் பிறக்கும் இரவில் ஆயிரக்கணக்கான மக்கள் இத்திருத்தலத்தின் முன் கூடி, புத்தாண்டை வரவேற்கின்றனர்.[8]

உசாத்துணைகள் தொகு

  1. வே ஜெயராஜ் (2000). ஈரோடு மாவட்டக் கோயில்கள். Aracu Aruṅkāṭciyakam.
  2. K. M. George (1999). Church of South India: Life in Union, 1947-1997 (in ஆங்கிலம்). Jointly published by Indian Society for Promoting Christian Knowledge and Christava Sahitya Samithi, Tiruvalla. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7214-512-5.
  3. "CSI Brough Memorial Church - Church - Erode - Tamil Nadu". yappe.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-14.
  4. "Home CSI BMC". Brough Memorial Church (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-14.
  5. "Plea to rename Erode Road after Rev Brough". Afternoonnews (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-14.
  6. Staff Reporter (2019-11-22). "Renaming of Brough Road opposed" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Coimbatore/renaming-of-brough-road-opposed/article30054745.ece. 
  7. "CSI Brough Memorial Church". www.tamilnadutourism.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-14.
  8. Staff Reporter (2022-01-01). "Public gather in large numbers in Erode to welcome New Year". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-12-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரப்_நினைவாலயம்&oldid=3846408" இலிருந்து மீள்விக்கப்பட்டது