பிரமோதவர்தனி

பிரமோதவர்தனி (Pramodhawardhani) என்பவர் கிபி 9-ஆம் நூற்றான்டின் நடுச் சாவகத்தின் மெதாங் பேரரசை ஆண்ட ராக்காய் பிக்கத்தான் (ஆட்சி: 838-850) என்பவரின் மனைவியும் அரசியும் ஆவார். இவர் (சிறீ ககுலுன்னன் (Çrī Kahulunnan) அல்லது சிறீ சஞ்சீவனா (Çrī Sanjiwana) என்றும் அழைக்கப்பட்டவர். இவர் சைலேந்திர மன்னர் சமரதுங்காவின் (ஆட்சி: 812—833) மகளும் ஆவார்.[1]:108 சஞ்சய வம்சத்தின் இளவரசரான பிராக்காய் பிக்கத்தானுடனான இவரது அரசத் திருமணம் இந்து சஞ்சய மற்றும் பௌத்த சைலேந்திர வம்சங்களுக்கிடையேயான அரசியல் நல்லிணக்கமாக நம்பப்பட்டது.

உலகப் புகழ் பெற்ற போரோபுதூர் பௌத்த நினைவுச் சின்னத்தை கட்டி முடித்தமைக்காக இவர் நினைவுகூரப்படுகிறார். அத்துடன் கெவு சமவெளியில் பல பௌத்த கோவில்களை அமைத்துள்ளார். இவைகளில் செவு கோயில் வளாகம், பிளவோசான் கோவில் வளாகம், சோச்சிவான் கோவில் வளாகங்களில் அமைந்துள்ள சிறிய பௌத்த பெர்வாரா கோவில்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இவரது பெயர் கரங்காதெங்கா, திரி தெப்புசான், உரூக்கம் போன்ற பல கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. 842 ஐச் சேர்ந்த திரி தெப்புசான் கல்வெட்டில் சீமா (வரி-நீக்கப்பட்ட) நிலங்கள் பிரமோதவர்தனியினால் போரோதூர் கோவில் பராமரிப்புக்காக வழங்கப்பட்டமை பொறிக்கப்பட்டுள்ளது.[2] 829 (பொ.ஊ 907) ஐச் சேர்ந்த ரூக்கம் கல்வெட்டில் ரூக்கம் கிராமம் நினி ஜாஜி ராக்ரியான் சஞ்சீவனாவினால் புனரமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் இக்கிராமம் எரிமலை வெடிப்பினால் அழிந்திருந்தது. லிம்வுங்கில் அமைந்துள்ள ஒரு புனித கட்டிடத்தை கவனித்துக்கொள்வது ரூக்கம் கிராமவாசிகளின் கடமை ஆகும். இந்தப் புனித கட்டிடம் சோச்சிவான் கோவில் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரமோதவர்தனியின் தோற்றமே பிரம்பானான் கோவிலில் அமைந்துள்ள துர்க்கை அம்மனின் உருவத்திற்கு முன்மாதிரியாக இருந்ததாக லோரோ ஜொங்கிராங் புராண விளக்கக் கூறுகிறது.

குறிப்புகள் தொகு

  1. Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
  2. Drs. R. Soekmono, (1988) [1973]. Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, 2nd ed (5th reprint ed.). Yogyakarta: Penerbit Kanisius. p. 46.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமோதவர்தனி&oldid=3030554" இலிருந்து மீள்விக்கப்பட்டது