பிரயாக் அக்பர்

இந்திய நாவலாசிரியர் மற்றும் பத்திரிகையாளர்

பிரயாக் அக்பர் (Prayaag Akbar) ஓர் இந்தியப் பத்திரிகையாளர் மற்றும் நாவலாசிரியராவார். சிக்ரால்.இன் என்ற எண்முறை பத்திரிகையின் முன்னாள் துணை ஆசிரியராகவும், அவுட்லுக் பத்திரிகையின் நிருபராகவும் பணியாற்றினார்.[1] இந்தியன் எக்சுபிரசு மற்றும் கேரவன் உள்ளிட்ட பத்திரிகைகளில் சாதி, வர்க்கம் மற்றும் அரசியல் பிரச்சினைகளை உள்ளடக்கிய கட்டுரைகள் எழுதியுள்ளார்.[2]

பிரயாக் அக்பர்
Prayaag Akbar
பிறப்பு25 சூலை 1982
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தொழில்எழுத்தாளர்/பத்திரிகையாளர்
தேசியம்இந்தியன்
குறிப்பிடத்தக்க படைப்புகள்லீலா

2017 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இவரது முதல் நாவலான லீலா[3] தி இந்து இலக்கிய பரிசுக்கு பட்டியலிடப்பட்டது. மேலும், குறுக்கெழுத்து நடுவர் பரிசும் டாடா இலக்கிய முதல் புத்தக விருதையும் இந்நாவல் வென்றது. பிப்ரவரி 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நெட்ஃபிளிக்சு தயாரிப்பு நிறுவனம் லீலா நாவலை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடரை உருவாக்கப்போவதாக அறிவித்தது.[4]

ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் பிரயாக் அக்பர் இலக்கியப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

அமெரிக்காவிலுள்ள டார்ட்மவுத் கல்லூரியில் பொருளாதாரமும் இலண்டன் பொருளியல் பள்ளியில் ஒப்பீட்டு அரசியலும் அக்பர் பயின்றார். மேலும் ஒரு வருடம் பிரித்தானியாவிலுள்ள ரூட்லெட்சு நிறுவனத்தில் விளம்பர உதவியாளராகக் கழித்தார்.[5] இவரது தந்தை எம்.ஜே. அக்பர் முன்னாள் வெளிவிவகாரத் துறை அமைச்சராவார்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "Prayaag Akbar". Aeon.
  2. "Leila". Allen & Unwin Book Publishers. பார்க்கப்பட்ட நாள் 8 April 2019.
  3. Guha, Keshava (2018-01-06). "Love and other jihads: Prayaag Akbar talks about his novel, 'Leila'". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-05-20.
  4. Jajodia, Ishaan. "Novel Approach". Dartmouth Alumni Magazine. பார்க்கப்பட்ட நாள் 8 April 2019.
  5. "Prayaag Akbar". Edinburgh International Book Festival. பார்க்கப்பட்ட நாள் 8 April 2019.
  6. Venkataramakrishnan, Rohan; Rajshekhar, M. "The MJ Akbar playbook: Men look back at how he preyed on women colleagues in newsrooms and got away". Scroll.in. பார்க்கப்பட்ட நாள் 8 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரயாக்_அக்பர்&oldid=3151307" இலிருந்து மீள்விக்கப்பட்டது