பிரிட்டனியர்

பிரிட்டனியர் (Britons) என்போர் பிரித்தானியாவில் குடியேறிய கெல்ட்டிய இனக் குழுமத்தினர் ஆவர். ஐரோப்பிய பகுதிகளில் வாழ்ந்த பல்வேறு இனக்குழுமங்களையும் கி.மு காலங்களில் கிரேக்கர் அழைத்த ஒரு பெயரே கெல்ட்டியர் என்பதாகும். அதே பெயர் உரோமர்களாலும் வழங்கப்பட்டது. இந்த கெல்ட்டிய இனக்குழுமத்தினரிடையே பல் வேறு பிரிவுகளும் இருந்தன. அதனடிப்படையில் பிரித்தானியாவில் குடியேறி இருந்த கெல்ட்டியரை உரோமர்கள் அழைத்தப் பெயரே "பிரிட்டன் கெல்டிக்" என்பதாகும். சுறுக்கமாக பிரிட்டனியர் என்றும் அழைக்கப்படுகின்றது.

இந்த பிரிட்டனியரின் வழித்தோன்றல்கள் தற்போது வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து பகுதிகளில் வசிக்கின்றனர் எனப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிட்டனியர்&oldid=695345" இலிருந்து மீள்விக்கப்பட்டது