பிரித்தி (இந்து தெய்வம்)

பிரித்தி (சமக்கிருதம்: प्रीति), அல்லது கர்னோட்பாலா, என்பவர் ஒரு இந்து பெண் தெய்வமாவார். காமத்திற்க்கும், அன்பிற்க்கும் கடவுளான, காமதேவனின், இரண்டு மனைவிகளில் ரதியும் பிரித்தியுமே அடங்குவர்.

பிரீத்தி
இடம்காமலோகம்
துணைகாம தேவன்
நூல்கள்ஸ்கந்த புராணம், கருட புராணம்

பிரித்தி, பாசமான அன்பை பிரதிநிதுத்துவப்படுத்தும் அதேவேளையில், [1]அவரது இணை மனைவியான, ரதியோ சிற்றின்ப இன்பத்தைக் குறிக்க பயன்படுகிறார்.[2] சில விளக்கங்களில், பிரித்தி தனி நபராகக் கருதப்படாமல், வெறுமனே ரதியின் மற்றொரு புனைப்பெயராகக் கருதப்பட்டு பயன்படுத்தப்படுகிறது

புராணக்கதை தொகு

புராணத்தின் படி, தனது தந்தையைக் காப்பாற்றவும், அவரின் மேல் உள்ள அன்பால், தனது இளமைகாலம் முழுவதையும் தவத்திலேயே கழித்ததால், பார்வதி பிரித்தி முன்பதாகத் தோன்றி, பிரித்தி, தனது இளமை வயதை தாண்டியிருந்தாலும், அவளுக்கு பொருத்தமான கணவன் கிடைப்பான் எனவும் அதற்காக சில குறிப்பிட்ட சடங்குகளையும், தவத்தையும் செய்யவேண்டும் என வரமளித்தார். ப்ரிதி அந்த சடங்குகளை முறையாகச் செய்தபோது, பார்வதி காமதேவனை புதிதாக இளமையாக இருக்கும் ப்ரிதியைச் சந்திக்க ஊக்குவித்தார், பிரித்தியை பார்த்த கணத்தில் இருந்தே அவளை காதலிக்க ஆரம்பித்த காமதேவன், அவளிடம் திருமணம் செய்துகொள்ள முன்மொழிந்தபோது, ப்ரிதி அவனிடம் தன் தந்தையின் சம்மதத்தைப் பெறச் சொல்கிறாள். ப்ரிதியின் தந்தை சம்மதம் தெரிவித்த பின்பே, காமதேவாவை மணந்து அவரது இரண்டாவது மனைவியாக ஆனாள். [3] இவ்வாறு எந்நேரமும் தந்தையை மிகவும் நேசித்ததாலேயே பாசத்தின் கடவுளாகக் கருதப்படுகிறார்.

விஷ்ணுவின் தெய்வீக பெண் ஆற்றலின் ஒரு அம்சமாகவும் சில வல்லுனர்களால் கருதப்படுகிறார்.[4]

சிவனின் தவத்தைக் குலைத்து அவரை பார்வதி மீது காதல் கொள்ளச் செய்வதற்காக, காமதேவன் செல்லும்போது, பிரித்தியும் அவனுடன் செல்லுகிறாள்.[5]

கருட புராணம் காமதேவர் மற்றும் ரதி ஆகியோருடன் பிரித்தியை வழிபடுவதையும் பரிந்துரைக்கிறது.[6]

மேற்கோள்கள் தொகு

  1. God of Desire: Tales of Kamadeva in Sanskrit Story Literature. State University of New York Press. 2006-06-01.
  2. A Classical Dictionary of Hindu Mythology and Religion, Geography, History and Literature. Routledge. 2013-11-05.
  3. Benton, Catherine (2006-06-01). God of Desire: Tales of Kāmadeva in Sanskrit Story Literature (in ஆங்கிலம்). SUNY Press. p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-6566-0.
  4. Jordan, Michael (2014-05-14). Dictionary of Gods and Goddesses (in ஆங்கிலம்). Infobase Publishing. p. 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4381-0985-5.
  5. König.), Harṣa (Kanauj (1827). Retnavali, or the Necklace: a drama : Preface: Drammatic system of the Hindus ; Appendix.
  6. Garuda Purana: Achara Khanda Part 2: English Translation only without Slokas: English Translation only without Slokas.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரித்தி_(இந்து_தெய்வம்)&oldid=3882049" இலிருந்து மீள்விக்கப்பட்டது