பிரியா பாபு

பிரியா பாபு (ஆங்கில மொழி: Priya Babu) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுப்பாலினச் செயல்பாட்டாளர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், பேச்சாளராவார். திருநங்கையருக்கான திருநங்கையர் ஆவண மையத்தை மதுரையில் 2016 இல் தொடங்கி, நடத்திவருகிறார்.[1] மாற்றுப் பாலினத்தவர்களின் படைப்புகள் வெளியிட டிரான்ஸ் பதிப்பகத்தையும் இசைப் பாடல்கள் போன்றவற்றை வெளியிடும் டிரான்ஸ்மீடியா எனும் யூடியூப் அலைவரிசையையும் நிர்வகித்து வருகிறார்.[2]

பிரியா பாபு
பிறப்புதிருச்சி
இருப்பிடம்மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்

இளமைக்காலம் தொகு

திருச்சியில் பிறந்த இவர் 1990 களில் மும்பைக்கு சென்றார். பாலின அடையாளத்துடன் பல்வேறு சமூகச் சிக்கலை அங்கே எதிர்கொண்டார். சு. சமுத்திரம் எழுதிய வாடாமல்லி நூலைப் படித்தபிறகு புதிய உத்வேகம் பெற்று, தொடர்ந்து வாசிக்கவும் எழுதவும் தொடங்கினார்.[3] 2001 ஆம் ஆண்டு தமிழக திரும்பி வந்து திருநங்கைகளின் நலனுக்காக செயல்படத்தொடங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக கலை இலக்கிய இரவுகளில் நாடகங்களை அரங்கேற்றினார்.[4]

இயக்கியவை தொகு

  • தமிழகத்தில் திருநங்கையர் வழக்காறுகள் - ஆவணப்படம்
  • வானம் தாண்டி (2017)- இசைத் தொகுப்பு
  • அரிகண்டி (2021) -குறும்படம்[5]

நூல்கள் தொகு

எழுதிய நூல்கள்
ஆண்டு தலைப்பு குறிப்பு
2007 அரவாணிகள் சமூக வரைவியல்
2008 மூன்றாம் பாலின் முகம்(புதினம்) கோவை நிர்மலா கலைக் கல்லூரி,
மதுரை மீனாட்சி கல்லூரிகளில் பாடத்திட்டமாக உள்ளது.[1]
2014 வெற்றிப்படிக்கட்டுகள்
2021 இடையினம்

விருதுகள் தொகு

  • 2012 பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையத்தின் பெரியார் விருது[6]
  • 2014 திராவிடர் கழகத்தின் பெரியார் விருது[7]
  • 2018 அவள் விகடனின் செயல்புயல் விருது.[8]
  • மேலும் சிறந்த சமூகச் சேவர்கள், சிறந்த மாற்றுப்பாலினச் செயல்பாட்டாளர் விருதுகளையும் பெற்றுள்ளார்.[9]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "'கணவரோடு நான் வாழ்ந்தால் தற்கொலை செய்துகொள்வோம் என்று மிரட்டினார்கள்'.... - எழுத்தாளர் பிரியா பாபு". விகடன். https://www.vikatan.com/health/writer-priya-babu-speaks-about-his-stress-relief-techniques. பார்த்த நாள்: 24 December 2023. 
  2. "First transgender publication and film company opened in Madurai Read more At: https://www.aninews.in/news/national/features/first-transgender-publication-and-film-company-opened-in-madurai20220705165120/". ஏ.என்.ஐ.. https://www.aninews.in/news/national/features/first-transgender-publication-and-film-company-opened-in-madurai20220705165120/. பார்த்த நாள்: 24 December 2023. 
  3. "திருநங்கைகள் வாழ்வாதாரம் மேம்பட உதவும் திருநங்கை பிரியா பாபு கடந்து வந்த பாதை!". யுவர் ஸ்டோரி. பார்க்கப்பட்ட நாள் 24 December 2023.
  4. "’காதலிக்கும் ஆண்கள் பாலியல் வடிகாலாக பயன்படுத்துகின்றனர்’ - திருநங்கை பிரியா பாபு உருக்கம்". வெப்துனியா. https://tamil.webdunia.com/regional-tamil-news/mens-uses-of-transgender-as-a-sexual-plotform-priya-babu-116102500035_1.html. பார்த்த நாள்: 24 December 2023. 
  5. "Period short film on transgender warrior breaks stereotypes Read more at: http://timesofindia.indiatimes.com/articleshow/104792091.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst". டைம்ஸ் ஆப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/madurai/period-short-film-on-transgender-warrior-breaks-stereotypes/articleshow/104792091.cms. பார்த்த நாள்: 24 December 2023. 
  6. "பாரதிதாசன்-பல்கலை-பெரியார்-விருதுகள்-வழங்கல்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2012/nov/01/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-580249.html. பார்த்த நாள்: 24 December 2023. 
  7. "திருநங்கைகளின் மேம்பாட்டுக்காக சேவையாற்றியவருக்கு பெரியார் விருது". வெப்துனியா. https://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-114011500047_2.html. பார்த்த நாள்: 24 December 2023. 
  8. "'செயல்புயல்' பிரியா பாபு". விகடன். பார்க்கப்பட்ட நாள் 24 December 2023.
  9. "Humanitarian Awards for social activists". தி இந்து. https://www.thehindu.com/news/cities/chennai/humanitarian-awards-for-social-activists/article65675939.ece. பார்த்த நாள்: 24 December 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_பாபு&oldid=3852761" இலிருந்து மீள்விக்கப்பட்டது