பிரேம் கணபதி

பிரேம் கணபதி (Prem Ganapathy) என்பவர் இந்திய தொழில் முனைவர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இவர் தோசா பிளாசா என்ற உணவக சங்கிலியை நிறுவியவர்.[2] சொற்ப முதலீட்டில் தொடங்கி, இவர் இந்தியா, நியூசிலாந்து, ஓமான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் 72 விற்பனை நிலையங்களுடன் தோசா பிளாசாவை உணவகச் சங்கிலியாக விரிவுபடுத்தினார்.[1][3]

பிரேம் கணபதி
Prem Ganapathy
பிறப்பு1973 (அகவை 50–51)[1]
தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநிறுவனர் தோசா பிளாசா

இளமை தொகு

கணபதி தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரத்தில் பிறந்தார். இவருக்கு ஏழு உடன்பிறப்புகள் இருந்தனர்.[4] கணபதி பத்தாம் வகுப்பை முடித்த பிறகு வேலை தேடி சென்னைக்குச் சென்றார். இவர் 1990-ல் மும்பைக்குச் செல்வதற்கு முன்பு சென்னையில் பல வேலைகளைச் செய்தார். பணமும், உள்ளூர் மொழி அறிவும் இல்லாமல் கணபதி மும்பையில் சிக்கித் தவித்தார். தமிழ்க் குடும்பத்தின் உதவியுடன் அடுமனையில்ல் வேலை செய்யத் தொடங்கினார்.[5]

தொழில் தொகு

1992ஆம் ஆண்டில், கணபதி தனது சொந்த உணவு வணிகத்தைத் தொடங்கினார். வாசி தொடருந்து நிலையத்திற்கு எதிரே ஒரு கை வண்டியில் இட்லி மற்றும் தோசைகளை விற்றார்.[4] 1997-ல், இவர் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து பல்வேறு வகையான தோசைகளை பரிசோதிக்கத் தொடங்கினார். 2003ஆம் ஆண்டில், வாசியில் உள்ள சென்டர் ஒன் பெருவணிக நிலையத்தில் தனது முதல் கடையைத் திறந்தார்.[1] 2012ஆம் ஆண்டு நிலவரப்படி, தோசை பிளாசா 4 நாடுகளில் 45 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது, 100க்கும் மேற்பட்ட வகையான தோசைகளை வழங்குகிறது.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Story of a man who made 70 Crore from nothing". reckontalk.com. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
  2. 2.0 2.1 "Dosa Plaza". dosaplaza.com. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
  3. "Case study: Dosa Plaza". thinkwhynot.com. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
  4. 4.0 4.1 "How Prem Ganapathy built Rs 30 crore empire with seed capital of just Rs 1000". Economic Times. 20 February 2012. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
  5. "Prem Ganapathy". openmarkets.in. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேம்_கணபதி&oldid=3839441" இலிருந்து மீள்விக்கப்பட்டது