பிரேம் குமார் ரியாங்கு

இந்திய அரசியல்வாதி

பிரேம் குமார் ரியாங்கு (Prem Kumar Reang) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1974 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதியன்று புபஞ்சாய் ரியாங்கு மற்றும் கும்படி தம்பதியருக்கு மகனாக இவர் பிறந்தார். திரிபுராவைச் சேர்ந்த இவர் தற்போது திரிபுராவின் பழங்குடி மக்கள் முன்னணியில் இணைந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காஞ்சன்பூர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [2] தற்போது காஞ்சன்பூரின் (இந்தியா) சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் [3]

பிரேம் குமார் ரியாங்கு
Prem Kumar Reang
மீன்வளம், கூட்டுறவு மற்றும் பழங்குடியினர் நல அமைச்சகம்
அமைச்சர்[1]
பதவியில்
2022–2023
முதலமைச்சர்மாணிக் சாகா
சட்டமன்ற உறுப்பினர், திரிபுராவின் சட்டமன்றம்
பதவியில்
09 மார்ச்சு 2018 – 2023
முன்னையவர்இராசேந்திர ரியாங்கு
பின்னவர்பிலிப் குமார் ரியாங்
தொகுதிகஞ்சன்பூர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 10, 1974
கச்சி ராம் பாரா, ஆனந்த பசார், வடக்கு திரிபுரா, திரிபுரா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி
துணைவர்மந்தா தரி ரியாங்கு
பெற்றோர்(கள்)
  • (தந்தை) புபஞ்சாய் ரியாங்கு
  • (தாய்) கும்படி ரியாங்கு

2022 ஆம் ஆண்டில் மாணிக் சாகா அமைச்சரவையில் மீன்வளம் மற்றும் கூட்டுறவு மற்றும் பழங்குடியினர் நலன் அமைச்சரானார். [4] [5] [6] தற்போது திரிபுராவில் மூன்று அமைச்சகங்களின் அமைச்சராக உள்ளார். புரு பழங்குடியினர் பிரச்சினைக்காக குரல் கொடுத்தவர்களில் இவரும் ஒருவராக இருந்தார் [7]

மேலும் காண்க தொகு

  1. திப்ரா மக்கள்
  2. திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி
  3. திரிபுரா

மேற்கோள்கள் தொகு

  1. "New Tripura CM Manik Saha Allocates Portfolios Keep Home, Health For Himself". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2023-01-05.
  2. "Kanchanpur Tripura Assembly Election 2018". பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
  3. "Member of Legislative Assembly".
  4. "Tripura Cabinet Ministers List 2022: Full list of ministers in Manik Saha cabinet and their portfolios".
  5. "Council of Ministers".
  6. "Fish production, per capita consumption increased significantly, says Minister Prem Kumar Reang".
  7. "Tripura MLA threatens to quit over Bru issue".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேம்_குமார்_ரியாங்கு&oldid=3841132" இலிருந்து மீள்விக்கப்பட்டது