பிலிம்ப்டன் 322

1921 ஆம் ஆண்டு எட்கர் பேங்சு எனும் பழம்பொருள் தேடுபவரால் ஈராக்கில் 1800 பொமுவைச் சேர்ந்த பிலிம்ப்டன் 322 எனும் பாபிலோனிய கணக்குக் களிமண்தட்டு ஆப்பெழுத்து ஆவணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அறுபதின்ம இலக்க முறைமையை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆவணத்தில், இயற்கணிதம் பற்றியான விரிவான அட்டவணை ஒன்று இருக்கிறது. பித்தாகரசு எனும் கிரேக்க கணக்கு வல்லுனர் பின்னாளில், 570 பொமுவில் கண்டுபிடித்த க2 + ச2 = ட2 எனும் பிதோகரசு விதி என்பதைப்பற்றி பிலிம்ப்டன்-322 களிமண்தட்டிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதானது வியப்பிலும் வியப்பு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிம்ப்டன்_322&oldid=3585791" இலிருந்து மீள்விக்கப்பட்டது