பிஷ்ணு மாகி

பிஷ்ணு மாகி (Bishnu Majhi) ( பிறப்பு 1986) ஒரு நேபாளி நாட்டுப்புறப் பாடகராவார். நேபாளத்தில் அதிக சம்பளம் வாங்கும் பாடகியான இவர், தனது 15 ஆண்டு பாடகர் வாழ்க்கையில் 5,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பதிவு செய்துள்ளார்,[1][2] "சிட்டல் டைன் பிபால் சாமி சா", "டிரைவர் டேய் மேன் பரியோ மலாய்", "லாலுபேட் நுக்யோ பூண்டிரா", "புர்பகோ மெச்சி நி ஹம்ராய் ஹோ, பாசிம் மகாகலி நி ஹம்ராய் ஹோ, "ரூமல் ஹல்லாய் ஹல்லாய்" போன்ற பல பாடல்கள் இதில் அடங்கும். [3] 2018இல் வெளியான இவரது பாடல் "சால்கோ பாட் தபரி ஹுனி" யூடியூப்பில் 60 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கொண்ட நேபாளி நாட்டுப்புறப் பாடலாக அமைந்தது. பண்பலை இசை விருதுகள் , காளிகா பண்பலை விருதுகள் ஆகியவற்றை பெற்றுள்ளார்.

பிஷ்ணு மாகி
Portrait
பொதுவெளியில் வெளியிட்ட பிஷ்ணு மாகியின் ஒரே புகைப்படம்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பிஷ்ணு மாகி
பிறப்பு1986 (அகவை 37–38)
சப்பகோட், சியாங்ஜா, நேபாளம்
இசை வடிவங்கள்நாட்டார் பாடல்
தொழில்(கள்)பாடுதல்
இசைக்கருவி(கள்)குரலிசை
இசைத்துறையில்2003–தற்போது வரை

ஆரம்ப வாழ்க்கை தொகு

கிராமப்புற சியாங்ஜாவில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர், ஐந்தாம் வகுப்பு வரையே கல்வி கற்றார். மேலும் 13 வயதிலேயே பொது நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கினார். 2004 ஆம் ஆண்டில் காட்மாண்டுவில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கியபின், சுந்தர்மணி அதிகாரியின் உதவியுடன் இவர் விரைவில் புகழ் பெற்றார். பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டார்.

சர்ச்சையான வாழ்க்கை தொகு

இவர் தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து தன்னை வெளிபடுத்தாத ஓர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.[1][2] கணவர் மூலமாக மட்டுமே இவரைத் தொடர்பு கொள்ள முடியும். இவரது கணவர் இவரது தொழில் வாழ்க்கையின் ஒப்பந்தங்கள், அட்டவணை மற்றும் தகவல்தொடர்புகள் அனைத்தையும் நிர்வகித்து வருகிறார்.[1][2] பொது வெளிக்குச் செல்லும் போது, இவர் தனது முகத்தை துணியால் மறைத்துக் கொள்கிறார்.[4] தேசிய மற்றும் சர்வதேச அளவில் அதிக தேவை இருந்தபோதிலும், இவர் இசை நிகழ்ச்சிகளை வழங்குவதில்லை அல்லது பிற பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.[4][5] விளம்பரத்திற்காக வெளியிடப்பட்ட ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே இவரிடம் உள்ளது. இவர் சமூக ஊடகங்களில் பங்கேற்பதில்லை. நேர்காணல்கள் எதுவும் வழங்கவில்லை.[5] இவர் நேபாளி இசையின் "அநாமதேய சூப்பர் ஸ்டார்" [2] அல்லது "மர்ம ராணி" என்று குறிப்பிடப்படுகிறார்.

பொது வாழ்க்கையிலிருந்து விலகி இருப்பது இவர் தனது கணவனால் கட்டுப்படுத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற ஊகத்தைத் தூண்டியது.[5] இது சியாங்ஜாவின் தலைமை மாவட்ட அதிகாரி தலையிட வழிவகுத்தது. இந்த இணை 6 சனவரி 2019 அன்று மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் [4][6] விசாரிக்கப்பட்டது, அங்கு இவர் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தந்தையுடன் மீண்டும் இணைந்தார்.[2] காவல்துறையினரின் கூற்றுப்படி, ஒரு முறையான கல்வி இல்லாததும், படித்த தனது கணவரின் சிறந்த முடிவுகளில் தான் வைத்திருந்த நம்பிக்கை ஆகியவையே இந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதற்கு காரணம் என்று கூறினார். உடல் பரிசோதனைக்காக முகமூடியை அகற்றும்படி இவரிடம் கேட்கப்பட்டது. இவரது முகத்தில் உடல் ரீதியான வன்முறைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று காவல்துறை கூறியது. நேர்காணல் செய்தவர்களில் ஒருவரான காவல் கண்காணிப்பாளர் இராஜ்குமார் லாம்சால், இவரிடம் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு இவரது கணவர் அதிகாரியே பதிலளித்தார் என்றும், இவர் ஒரு சுதந்திரமான வாழ்க்கை வாழ்கிறார் என்று முடிவு செய்வது கடினம் என்றும் கூறினார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "गुमनाम गायिका". nepalmag.com.np (in English). Archived from the original on 27 April 2020. பார்க்கப்பட்ட நாள் 11 May 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "गुमनाम सुपरस्टार विष्णु माझी". narimag.com.np (in Nepali). Archived from the original on 27 April 2020. பார்க்கப்பட்ட நாள் 11 May 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "सर्वाधिक महँगी गायिका विष्णु माझी, जो नेपथ्यबाट 'ब्याक टु ब्याक' हिट गीत दिइरहेकी छिन् -". Ujyaalo Network (in அமெரிக்க ஆங்கிலம்). 7 June 2019. Archived from the original on 14 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 11 May 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 4.2 "सर्वाधिक महँगी गायिका विष्णु माझी, जो नेपथ्यबाट 'ब्याक टु ब्याक' हिट गीत दिइरहेकी छिन् -". Ujyaalo Network (in அமெரிக்க ஆங்கிலம்). 7 June 2019. Archived from the original on 14 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 11 May 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. 5.0 5.1 5.2 "विष्णु माझीको स्वेच्छिक गुप्तवास कि बाध्यता ?". Online Khabar (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 27 April 2020. பார்க்கப்பட்ட நாள் 11 May 2020.
  6. "म बन्धक छैन : गायिका विष्णु माझी". म बन्धक छैन : गायिका विष्णु माझी (in ஆங்கிலம்). Archived from the original on 27 April 2020. பார்க்கப்பட்ட நாள் 11 May 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஷ்ணு_மாகி&oldid=3919492" இலிருந்து மீள்விக்கப்பட்டது