பி. கல்யாணி அம்மா

பி. கல்யாணி அம்மா (B. Kalyani Amma, 22 பிப்ரவரி 1884 - 9 அக்டோபர் 1959) கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். கல்யாணி அம்மாவின் குறிப்பிடத்தக்க படைப்புகள் வியாழவத்த சுமரணங்கள் (பன்னிரண்டு வருட சுழற்சியின் நினைவுகள்) மற்றும் ஓர்மையில் நின்னும் ( நினைவுகள் ) ஆகியவையாகும்.[1]  கேரளாவில் பெண்களுக்காக வெளியிடப்பட்ட சாரதா[2][3]  மற்றும் மலையாளமாசிகா  [4] ஆகிய இரண்டு ஆரம்ப இதழ்களின் ஆசிரியர்களில் ஒருவராவார். கல்யாணி அம்மா சுதேசாபிமானி கே.ராமகிருஷ்ண பிள்ளையின் மனைவி ஆவார். இவரின் கணவர் ராமகிருஷ்ண பிள்ளை அரசியல் எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் ஆசிரியராவார். [5]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

பி. கல்யாணி அம்மா நூற்றாண்டின் தொடக்கத்தில் திருவாங்கூரில் முந்தைய சமஸ்தானத்தில் வாழ்ந்தார் . 1884 பிப்ரவரி 22 அன்று திருவனந்தபுரம் குதிரவட்டம் குழிவிளக்கத்து வீட்டில் பிறந்தார் . இவர் சுப்பிராயன் பொட்டி மற்றும் பகவதி அம்மா ஆகியோரின் மகளாவார். [1]  இவர் ஒரு பாரம்பரிய நாயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தனது மெட்ரிகுலேஷனை ஒரு ஜெனானா மிஷன் பள்ளியில் கற்றார் மற்றும் பள்ளியை நடத்திய மிஷனரிகளின் நிதி உதவியுடன் முடித்தார். இவர் படித்த பள்ளியில் அதிகாரப்பூர்வமாக உயர்நிலைப்பள்ளி இல்லை. பள்ளி அதிகாரிகள் இவருக்கும் மற்ற இரண்டு நண்பர்களுக்கும் கற்பிக்க ஆசிரியர்களை நியமித்தனர். [5]

இவர் FA முடிப்பதற்கு முன்பே திருமணம் செய்துகொண்டார் (தற்போதைய முன் பல்கலைக்கழகம் அல்லது தரம் 11 மற்றும் 12 க்கு சமம்). இவரது கணவர் தனது கல்வியை முடிக்க ஊக்குவித்தார் மற்றும் ராமகிருஷ்ண பிள்ளைக்கு திருமணத்திற்கு பிறகு இவர் உயர் கல்வியைத் தொடர்ந்தார். [6]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

கல்யாணி அம்மா அவர்களின் திருமணத்திற்கு முன்பே ராமகிருஷ்ண பிள்ளையை தெரியும். கல்யாணி அம்மா மற்றும் ராமகிருஷ்ண பிள்ளை ஆகியோரின் ஜாதகம் (இந்து திருமணத்தில் முக்கியமானது) பொருந்தாததால் இவர்களது குடும்பத்தின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் நடைபெற்றது.[7]  1904 இல் திருமணம் நடந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரளாவில் இல்லாத நிலையில், இவர் கணவருடன் பகிர்ந்து கொண்ட வலுவான பிணைப்பில் இவரது திருமண வாழ்க்கை அசாதாரணமானது.

திருவிதாங்கூர் அரசால் ராமகிருஷ்ண பிள்ளை வெளியேற்றப்பட்டபோது, ​​இவர் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் தனது கணவரைப் பின்தொடர்ந்தார். இவர் கற்பித்தல் வேலையை கைவிட்டு அவருடன் மலபார் சென்றார். இவர்கள் இருவரையும் மற்றொரு புகழ்பெற்ற எழுத்தாளரும், அறிவுஜீவியும், கேரளாவைச் சேர்ந்த முதல் பெண் நாடகக் கலைஞருமான தரவத் அம்மாள் அம்மா பாலகாட்டில் வளர்த்தார்.[8]  அவர் இருவருக்கும் வளர்ப்புத் தாயாகவும் செயல்பட்டார்.

பிற்கால வாழ்வு தொகு

ராமகிருஷ்ண பிள்ளை வெளியேற்றப்பட்ட பிறகு கல்யாணி அம்மா தனது கல்வியை சென்னையில் தொடர்ந்தார். இவர் தத்துவத்தில் பிஏ பட்டம் முடித்தார் மற்றும் ஆசிரியர் பயிற்சி வகுப்பையும் செய்தார். இவர் மலபார், கண்ணூரில் உள்ள ஒரு பள்ளியில் கற்பிக்கத் தொடங்கினார், குடும்பம் இவருடன் சென்றது. [9] பின்னர் இவர் மங்களூரில் உள்ள ஒரு பள்ளிக்குச் சென்றார். ராமகிருஷ்ண பிள்ளை அவர்கள் மலபாரில் இருந்தபோது காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் 1916 இல் அவர் இறக்கும் வரை அவரை கவனித்துக்கொண்டார். 1937 இல் இவர் ஒரு தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றார் மற்றும் திருவிதாங்கூரில் உள்ள தனது மூதாதையர் வீட்டிற்கு செல்லாமல் மலபாரில் தங்கினார். [9]

இலக்கிய சாதனைகள் தொகு

கல்யாணி அம்மா மலபாரில் தங்கியிருந்த போது மலையாளமாசிகா தொகுத்து எழுதினார். இவர் திருவிதாங்கூரில் இருந்தபோது சாரதா தொகுத்து எழுதிக் கொண்டிருந்தார்.[3][10]   இரண்டு இதழ்களிலும் பெண்களின் கல்வி, சுகாதாரம், சமூக சீர்திருத்தம் போன்ற கட்டுரைகள் இருந்தன. கல்யாணி அம்மா பல்வேறு இதழ்களுக்கும் தொடர்ந்து பங்களிப்பவராக இருந்தார். ஓர்மையில் நின்னும் (பழைய கால ஞாபகங்கள்),  வியாழவத்த சுமரணங்கள் (பன்னிரண்டு ஆண்டுகள் ஒரு சுழற்சி நினைவுகள்), மகதிகள் (சிறந்த பெண்கள்) தாமரசரி , கர்மபலம் (ஒருவரின் நடவடிக்கையின் பலன்கள்), வீட்டிலும் புறத்தும் (உள்ளே மற்றும் வெளியே), ஆரோக்கிய சாஸ்திரம் ( ஆரோக்கியத்தின் அறிவியல்), ஆரோக்கிய சாஸ்திரமும் கிரகபாரணமும் (வீட்டின் மேலாண்மை மற்றும் சுகாதார அறிவியல்) இவைகள் இவரது ஆவணப்படுத்தப்பட்ட புத்தகங்களாகும். [1]

ஓர்மையில் நின்னும் , இவரது சுயசரிதை, கேரளாவில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு பெண்ணின் சமூக பழக்கவழக்கங்கள், தீண்டாமை தொடர்பான நடைமுறைகள் மற்றும் வாழ்க்கை பற்றிய ஒரு தெளிவான வாசிப்பாகும். இவர் இலக்கிய மற்றும் சமூகத் துறையில் நன்கு அறியப்பட்ட நபராக இருந்தார். புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியை இவர் தன் நண்பரான தரவத் அம்மினி அம்மாவிடம் விட்டுவிட்டார், ஏனென்றால் இவர் இறந்த பிறகு பத்திரிகையாளர்கள் தன் மகளை தன் கதைக்காக தேடுவார்கள் என்று இவருக்குத் தெரிந்தது. [9]

வியாழவத்த ஸ்மரணங்கள் இவரது மிகவும் பிரபலமான புத்தகம். இது ராமகிருஷ்ண பிள்ளையுடன் இவரது வாழ்க்கையை சித்தரிக்கிறது, இது இவர் இறக்கும் வரை பன்னிரண்டு ஆண்டுகள் நீடித்தது. வியாழவத்த ஸ்மரணகலின் 1998 பதிப்பு கோட்டாட்சியிலுள்ள டிசி புத்தகத்தால் வெளியிடப்பட்டது, இதில் தரவத் அம்மாளு அம்மாவின் (14.12.1916) அறிமுகக் குறிப்புகள் அடங்கியுள்ளன. வனத்திற்குள் நாடுகடத்தப்பட்ட இராமனைத் தொடர்ந்து கல்யாணி அம்மாவை சீதையுடன் ஒப்பிட்டு தரவத் அம்மாள் அம்மாவின் முன்னுரை புத்தகத்தின் வரவேற்புக்கான தொனியை அமைத்தது.[1]  இந்த புத்தகம் 1916 இல் முதன்முதலில் வெளியிடப்பட்டதிலிருந்து பதிமூன்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கொண்டிருந்தது. [11]

மகதிகல் கொச்சின் சமஸ்தானத்தில் ஒரு பாடப்புத்தகமாக பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. [6]

கல்யாணி அம்மா கேரளாவில் இருந்து மகளிர் பத்திரிகைகளுக்கு ஆரம்பகாலத்தில் நன்கு அறியப்பட்டவர்களில் ஒருவர்.[12]  இவர் பெண்களின் உடல்நலம், கல்வி, வீட்டு மேலாண்மை போன்ற பல்வேறு பாடங்களில் எழுதினார்.[4]  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரளாவில் சமூக மற்றும் வகுப்புவாத சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் இவர் ஆர்வம் காட்டினார். கேரளாவில் ஒரு நாயரின் பார்வையில் தீண்டாமை மற்றும் சாதி அமைப்பு எவ்வாறு செயல்பட்டது என்பது குறித்த சில தனிப்பட்ட ஆவணங்களில் இவரது சுயசரிதை ஒன்றாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Jayasree, G. S. (2015-08-27). "Twelve eventful years" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/books/swadeshabhimani-k-ramakrishna-pillais-wife-b-kalyani-amma-was-a-writer-and-social-reformer-in-her-own-right/article7582805.ece. 
  2. Unnikrishnan, Sandhya M. (January–June 2019). Unregistered Representation of Women "Heroes" in the Indian Freedom Struggle with Special Reference to Kerala. Research Journal of Kisan Veer Mahavidyalaya, Wai. பக். 54. 
  3. 3.0 3.1 sajuchelangad@gmail.com, സാജു ചേലങ്ങാട് |. "വനിതകളുടെ പത്രപ്രവർത്തനവും കൊച്ചിയും". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2021-04-22. பார்க்கப்பட்ட நாள் 2021-04-22.
  4. 4.0 4.1 Priyadarsanan, G. (1974). Masikapatanangal (Studies on Magazines). Kottayam: Sahitya Pravarthaka Co-operative Society Ltd.. 
  5. 5.0 5.1 Antony, Teena (2013). "Women's Education Debates in Kerala: Fashioning Sthreedharmam" (PDF). Shodhganga : a reservoir of Indian theses @ INFLIBNET. pp. 223–236. பார்க்கப்பட்ட நாள் 21 April 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  6. 6.0 6.1 Antony, Teena (January–June 2013). "Malayali women: Education and the development of the self in the early 20th century". National Journal of Jyoti Research Academy 7: 24–30. பன்னாட்டுத் தர தொடர் எண்:0975-461X. https://www.jyotinivas.org/pdf/Vol7(1).pdf. 
  7. "നഷ്ടജാതകവും ലാഭജാതകവും". ManoramaOnline. பார்க்கப்பட்ட நாள் 2021-04-22.
  8. "B. Kalyani Amma - Biography". www.keralasahityaakademi.org. பார்க்கப்பட்ட நாள் 2021-04-22.
  9. 9.0 9.1 9.2 Amma, B. Kalyani (1964). K. Gomathy, Amma. ed. Ormayil Ninnu. Kottayam: Sahitya Pravarthaka Co-operative Society Ltd.. 
  10. Priyadarshan, G. (1972). Manmarinja Masikakal (Magazines that no longer exist). Kottayam: National Book Stall. 
  11. Amma, B. Kalyani (1997). Vyaazhavattasmaranakal. Kottayam: D.C. Books. 
  12. Devika, J. (2005). Her-self: Early Writings on Gender by Malayalee Women, 1898-1938. Kolkata: Stree. பக். xxxi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8185604746. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கல்யாணி_அம்மா&oldid=3934999" இலிருந்து மீள்விக்கப்பட்டது