பி. கொல்ல அள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

பி. கொல்லஅள்ளி (P Gollahalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643275.[1] இந்த ஊரானது பி. கொல்லஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

கொல்லஅள்ளி
பி. கொல்லஹள்ளி
பி. கொல்லள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636808

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 293 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.[2]

மக்கள் வகைபாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 191, மொத்த மக்கள் தொகைகள் 784 ஆகும். இதில் 442 ஆண்களும், 342 பெண்களும் அடங்குவர்.[3]

மேற்கோள் தொகு

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "P.gollahalli Village , Palakkodu Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.
  3. "P Gollahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கொல்ல_அள்ளி&oldid=3601732" இலிருந்து மீள்விக்கப்பட்டது