பி. செகநாத தாசு

பி. செகநாத தாசு (B. Jagannadha Das)(பிறப்பு: ஜூலை 27, 1893) என்பவர் ஒரிசா உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது தலைமை நீதிபதியும், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியும் ஆவார்.[1]

தொழில் தொகு

செகநாத தாசு 1893இல் பெர்காம்பூரில் பிறந்தார். பெர்காம்பூர், கல்லிகோட்டி கல்லூரி மற்றும் சென்னை, மாநிலக் கல்லூரியில் கணிதத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் சென்னை, சட்டக் கல்லூரியில் சட்டத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். மதராசு உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சிபெற்றார். தாசு 1921இல் இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார். மகாத்மா காந்தியுடன் தேசியவாத இயக்கம், சமூகப் பணிகளில் பங்கேற்றார். இவர் ஜூலை 26, 1948இல் ஒரிசா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் இந்த உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 1951 அக்டோபர் 31 அன்று பதவி உயர்த்தப்பட்டார்.[2] செகநாத தாசு 1953இல் இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றார். பின்னர் வயது முதிர்வு காரணமாக 26 ஜூலை 1958இல் ஓய்வு பெற்றார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Jaitley criticises Congress for creating hue and cry over judicial appointment issue". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/jaitley-criticises-congress-for-creating-hue-and-cry-over-judicial-appointment-issue/articleshow/64529496.cms?from=mdr. 
  2. "Former Chief Justice | Orissa High Court, Cuttack". orissahighcourt.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.
  3. "FORMER JUSTICES | SUPREME COURT OF INDIA". main.sci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._செகநாத_தாசு&oldid=3188888" இலிருந்து மீள்விக்கப்பட்டது