பி. ஜி. ராஜேந்திரன்

இந்திய அரசியல்வாதி

பி. ஜி. ராஜேந்திரன் ஆலங்குளம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2001 ஆம் ஆண்டு தேர்தலில் அதே ஆலங்குளம் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இவர் பி. ஜி. ஆர் என்று அழைக்கப்படுகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தாயார்தோப்பு (சூரண்டை அருகில்) என்ற கிராமத்திலிருந்து வந்தவர். ஆலங்குளம் தொகுதியில் இருந்து இரண்டு தடவைகள் சட்டசபைக்கு போட்டியிட்டு இரண்டு முறையும் வெற்றி பெற்றார். முதல் தடவையாக 2001-ல் ஆலடி அருணாவைத் (முன்னாள் சட்ட அமைச்சர்) தோற்கடித்தார். இரண்டாவது முறையாக 2011-ல் பூங்கோதையை தோற்கடித்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஜி._ராஜேந்திரன்&oldid=3563281" இலிருந்து மீள்விக்கப்பட்டது