பீடோஃபிரினே அமௌவன்சிஸ்

பீடோஃபிரினே அமௌவன்சிஸ் (Paedophryne amauensis) என்பது பப்புவா நியூ கினியைச் சேர்ந்த தவளை இனம். 2009 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட இது, சனவரி 2012 இல் தனி ஒரு சிற்றினமாய் அறிவிக்கப்பட்டது[1].

உலகின் மிகச்சிறிய முதுகெலும்பி

பெயர் விளக்கம் தொகு

இத்தவளையின் பெயர் அது கண்டுபிடிக்கப்பட்ட அமௌ (Amau) என்னும் ஊர்ப்பெயரைக் கொண்டுள்ளது. அதன் பொதுப்பெயர் இரண்டு கிரேக்கச் சொற்களால் ஆனது. Paedos (παίδος) என்னும் கிரேக்கச் சொல் "குழந்தை", "குட்டி", "குஞ்சு" என்றும், phryne (φρύνος) என்னும் சொல் "தவளை", "தேரை" என்றும் பொருள்படும்.

இத்தவளை Paedophryne என்னும் பேரினத்தின் கீழ் வருகின்ற இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் உடலமைப்பும் பண்களும் தொகு

இத்தவளை வெறும் 7.7 மில்லி மீட்டர் அளவே உள்ள இது உலகின் யாவற்றினும் சிறிய முதுகெலும்பி ஆகும். இதற்கு முன் இந்தோனீசிய மீச்சிறு கெண்டை என்னும் மிகச்சிறு ஒரு கெண்டை மீன் வகையே ("Paedocypris progenetica") உலகின் மிகச்சிறிய முதுகெலும்பியாக இருந்தது. அதனுடைய நீளம் 7.9 மில்லி மீட்டர்]].[2][3] .

 
பீடோஃபிரினே அமௌவன்சிசின் புதிர்க்கதிர் (அல்லது X-கதிர்)ப் படம்.

இந்தக் குட்டித் தவளை, நிலத்தில் வாழ்கின்றது. இதன் வளர்ச்சிநிலைகளில் தலைப்பிரட்டை (tadpole) என்னும் வளர்ச்சிநிலை இல்லை[2] அதற்கு மாறாக இவை முட்டையில் இருந்து நேரடியாகவே முழுவதும் உருவான குஞ்சுகளாகப் பிறக்கின்றன[4]. இக் குட்டித் தவளைகள் அவற்றின் உடல் நீளத்தைப் போல் 30 மடங்கு தொலைவைத் தாண்டிக் குத்திக்கும் வல்லமை உடையது. இது சிறு முதுகெலும்பில்லா உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. இவ் இனத்தின் ஆண் தவளைகள் மிக உயர்துடிப்பு கீச்சொலியில் (பூச்சிகள் போல்) கத்துகின்றன. இதன் ஒலித் துடிப்பலைகள்8400 முதல் 9400 Hz (எர்ட்ஃசு அல்லது நொடிக்கான அலைத்துடிப்புகள்) கொண்டவை.[1].

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் தொகு

  1. 1.0 1.1 Rittmeyer, Eric N.; Allison, Allen; Gründler, Michael C.; Thompson, Derrick K.; Austin, Christopher C. (2012). Etges, William J.. ed. "Ecological guild evolution and the discovery of the world's smallest vertebrate". PLoS ONE 7 (1): e29797. doi:10.1371/journal.pone.0029797. http://www.plosone.org/article/info%3Adoi%2F10.1371%2Fjournal.pone.0029797. பார்த்த நாள்: 11 January 2012. 
  2. 2.0 2.1 "World's smallest creature with a vertebrate named". The Telegraph. 12 January 2012 இம் மூலத்தில் இருந்து 18 மே 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/67kIEZ4EQ?url=http://www.telegraph.co.uk/earth/wildlife/9008913/Worlds-smallest-creature-with-a-vertebrate-named.html. பார்த்த நாள்: 12 January 2012. 
  3. "Hallan en Papúa Nueva Guinea a las ranas más pequeñas del mundo" (in Spanish). eluniverso.com. பார்க்கப்பட்ட நாள் 12 January 2012.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Tiny frog claimed as world's smallest vertebrate". The Guardian. 12 January 2012. http://www.guardian.co.uk/environment/2012/jan/12/world-smallest-frog. பார்த்த நாள்: 12 January 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீடோஃபிரினே_அமௌவன்சிஸ்&oldid=3221542" இலிருந்து மீள்விக்கப்பட்டது