பும்தாங் மாவட்டம்

பும்தாங் மாவட்டம் (Bumthang District) பூட்டானிலுள்ள 20 மாவட்டங்களில் ஒன்றாகும். இங்கு வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் பல அமைந்துள்ளன. இங்கு 4 பள்ளத்தாக்குகள் அமைந்துள்ளன. அவை உரா, சும்மி, டாங், சோய்கார் ஆகியன. இம்மாநிலம் ஒட்டுமொத்தமாக பும்தாங் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படும். பும்தாங் எனில் அழகான நிலம் என்று பொருள்.

பும்தாங் மாவட்டம்
བུམ་ཐང་རྫོང་ཁག (திஃசொங்கா மொழி)
மாவட்டம்
பூட்டானில் பும்தாங் மாவட்டத்தின் வரைபடம்
பூட்டானில் பும்தாங் மாவட்டத்தின் வரைபடம்
நாடு பூட்டான்
தலைமையகம்ஜாகர்
பரப்பளவு
 • மொத்தம்2,717 km2 (1,049 sq mi)
மக்கள்தொகை (2017)
 • மொத்தம்17,820
 • அடர்த்தி6.6/km2 (17/sq mi)
நேர வலயம்BTT (ஒசநே+6)
ம. மே. சு. (2019)0.661[1]
மத்திமம் · 6வது
இணையதளம்www.bumthang.gov.bt
குர்ஜி லாக்காங் , ஜாகர்
ஜாகர்

பொருளாதாரம் தொகு

இங்கே கேழ்வரகு, பால் பொருட்கள், தேன், ஆப்பிள், உருளைக்கிழங்கு, கம்பிளி போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. பொருளாதாரத்தில் கேழ்வரகு முக்கியப் பங்கு வகிக்கிறது.

மொழிகள் தொகு

பும்தாங்கா, ட்ஸோங்கா, கென்ங், கென்ங்கா, குர்டோப்கா, நுப்பிக்கா, ப்ரோக்காட், துர் மற்றும் யாக்கெர்ட் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.

ஜிவோக்கள் தொகு

கிராமங்களின் தொகுப்பு ஜிவோக்கள்[2] என அழைக்கப்படும். பும்தாங் 4 ஜிவோக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை,

  • சும்மே
  • சோய்கோர்
  • டாங்
  • உரா

நகரங்கள் தொகு

  • சும்மே
  • ஜாகர்
  • உரா
  • டாங்

மேற்கோள்கள் தொகு

  1. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
  2. "Chiwogs in Chukha" (PDF). Election Commission, Government of Bhutan. 2011. Archived (PDF) from the original on 2011-10-02. பார்க்கப்பட்ட நாள் 2011-07-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பும்தாங்_மாவட்டம்&oldid=3707005" இலிருந்து மீள்விக்கப்பட்டது