புரோப்பனோலமீன்

புரோப்பனோலமீன் (Propanolamine) என்ற சேர்மத்தால் பின்வரும் மூலச்சேர்மங்கள் எதையும் விவரிக்கமுடியும். :[1]

  • 2-அமினோ-1-புரோப்பனால் அலானைன் என்ற சேர்மத்தின் ஐதரசனேற்ற வழிப்பெறுதி.
  • 3- அமினோ-1-புரோப்பனால், நேர்சங்கிலி சேர்மம் ஆனால் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
  • 3-அமினோ-2-புரோப்பனால் (ஐசோபுரோப்பனோலமீன்கள்). ஒன்று அல்லது இரண்டு சமான புரோப்பைலீன் ஆக்சைடுடன் அமீன்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

அமீன் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை அமீனாக இருந்தால் பல வழிப்பெறுதிகள் கிடைக்கின்றன. மூல புரோப்பனோலமீன்கள் நிறமற்றவையாக உள்ளன. இவற்றின் மூலக்கூற்று வாய்ப்பாடு C3H9NO. என்பதாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Frauenkron, Matthias; Melder, Johann-Peter; Ruider, Günther; Rossbacher, Roland; Höke, Hartmut (2005), "Ethanolamines and Propanolamines", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a10_001

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோப்பனோலமீன்&oldid=3073258" இலிருந்து மீள்விக்கப்பட்டது