புரோமோபென்டாகார்பனைல் இரேனியம்(I)

புரோமோபென்டாகார்பனைல் இரேனியம்(I) (Bromopentacarbonylrhenium(I)) என்பது Re(CO)5Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம இரேனியம் சேர்மமாகும். பொதுவாக இரேனியத்தின் அணைவுச் சேர்மங்களைத் தயாரிக்க இது பயன்படுத்தப்படுகிறது.

புரோமோபென்டாகார்பனைல் இரேனியம்(I)
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோமிடோ பென்டாகார்பனைல் இரேனியம்
இனங்காட்டிகள்
14220-21-4 Y
EC number 238-084-8
InChI
  • InChI=1S/5CO.BrH.Re/c5*1-2;;/h;;;;;1H;/q;;;;;;+1/p-1
    Key: NWJBOTGGBYFKEJ-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6096983
  • [C-]#[O+].[C-]#[O+].[C-]#[O+].[C-]#[O+].[C-]#[O+].Br[Re]
பண்புகள்
Re(CO)5Br
வாய்ப்பாட்டு எடை 406.16 கி/மோல்
தோற்றம் நிறமற்றது
உருகுநிலை 85-90 ° செல்சியசு வெப்பநிலையில் பதங்கமாகும் (0.2 மி.மீ பாதரச அழுத்தத்தில்)
குளோரோகார்பன்கள்-இல் கரைதிறன் கரையும்
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அழிக்கும்
H301, H311, H315, H319, H331, H335
P261, P264, P270, P271, P280, P301+310, P302+352, P304+340, P305+351+338, P311, P312, P321, P322, P330
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு தொகு

டையிரேனியம் டெக்காகார்பனைலை புரோமினுடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்து எளிய முறையில் புரோமோபென்டா கார்பனைல் இரேனியம்(I) சேர்மத்தைத் தயாரிக்கிறார்கள் :[1]

Re2(CO)10 + Br2 → 2 ReBr(CO)5.

இரேனியம்(III) புரோமைடை ஒடுக்க கார்பனைலேற்றம் செய்து முதலில் இச்சேர்மம் தயாரிக்கப்பட்டது:[2]

ReBr3 + 2 Cu + 5 CO → BrRe(CO)5 + 2 CuBr

இவ்வினையில் தாமிர(I) புரோமைடு உடன் விளைபொருளாக உருவாகிறது.

வினைகள் தொகு

பிற இரேனியம் அணைவுச்சேர்மங்கள் தயாரிப்பதற்கு உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாக புரோமோபென்டா கார்பனைல் இரேனியம்(I) பயன்படுகிறது. துத்தநாகம் மற்றும் அசிட்டிக் அமிலம் ஆகிய சேர்மங்களுடன் சேர்ந்து வினைபுரிந்து பென்டாகார்பனைல் ஐதரிடோ இரேனியம் (HRe(CO)5) அணைவுச் சேர்மத்தைக் கொடுக்கிறது[3]

Re(CO)5Br + Zn + HO2CCH3 → ReH(CO)5 + ZnBrO2CCH3.

டைகிளைம் என்ற கரைப்பானில் கரைக்கப்பட்ட டெட்ரா எத்திலமோனியம்புரோமைடுடனும் இது வினைபுரிந்து [NEt4]2[ReBr3(CO)3)] என்ற அணைவுச் சேர்மத்தைக் கொடுக்கிறது. இந்த அணைவுச் சேர்மம் இரேனியம் முக்கார்பனைல் குழுவைக் கொண்ட சேர்மங்களைத் தயாரிக்க உதவும் முக்கியமான முன்னோடிச் சேர்மமாகும்.[4] தண்ணீருடன் புரோமோபென்டா கார்பனைல் இரேனியம்(I) சேர்த்து சூடுபடுத்துவதால் முந்நீர் அணைவுச் சேர்மங்கள் உருவாகின்றன.

ReBr(CO)5 + 3 H2O → [Re(H2O)3(CO)3]Br + 2 CO

இப்பாதையில் டெட்ரா எத்திலமோனியம்புரோமைடு உடன் விளைபொருள் உருவாதல் தவிர்க்கப்படுகிறது. வினைகலவையில் இருந்து இவ்வுடன் விளை பொருளை பிரித்து எடுப்பது பெரும்பாலும் கடினமான செயலாகும்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. Steven P. Schmidt; William C. Trogler; Fred Basolo (1990). "Pentacarbonylrhenium Halides". Inorganic Syntheses. Inorganic Syntheses 28: 154–159. doi:10.1002/9780470132593.ch42. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470132593. 
  2. W. Hieber; Hans Schulten (1939). "XXX. Mitteilung über Metallcarbonyle. Über Rhenium-Kohlenoxyd-Verbindungen". Zeitschrift für anorganische und allgemeine Chemie 243 (2): 164–173. doi:10.1002/zaac.19392430205. 
  3. Michael A. Urbancic; John R. Shapley (1990). "Pentacarbonylhydridorhenium". Inorganic Syntheses. Inorganic Syntheses 28: 165–8. doi:10.1002/9780470132593.ch43. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470132593. 
  4. R. Alberto; A Egli; U. Abram; K. Hegetschweiler; V. Gramlich; P. A. Schubiger (1994). "Synthesis and Reactivity of [NEt4]2[ReBr3(CO)3]. Formation and Structural Characterization of the Clusters [NEt4][Re33-OH)(µ-OH)3(CO)9] and [NEt4][Re2(µ-OH)3(CO)6] by alkaline titration". J. Chem. Soc., Dalton Trans. (19): 2815–2820. doi:10.1039/DT9940002815. 
  5. N. Lazarova; S. James; J. Babich; J. Zubieta (2004). "A convenient synthesis, chemical characterization and reactivity of [Re(CO)3(H2O)3]Br: the crystal and molecular structure of [Re(CO)3(CH3CN)2Br]". Inorganic Chemistry Communications 7 (9): 1023–1026. doi:10.1016/j.inoche.2004.07.006.