புறந்தை என்பது சங்ககால ஊர்களில் ஒன்று. இதன் அரசன் பெயர் பெரியன். இவன் சிறந்த வள்ளல்களில் ஒருவன்

‘புறந்தை முன்றுறை’ என இந்த ஊர் குறிப்பிடப்படுவதால் இது கடற்கரை ஓரத்தில் இருந்தது எனத் தெரிகிறது.

இதன் துறையில் பல புதிய புதிய நாரைகள் வந்து ஒலி எழுப்பிக்கொண்டே யிருக்குமாம்.

(இந்த நாரை ஒலிப்பது போல் தலைவன் தலைவி உறவை ஊரார் பேசிக்கொண்டிருப்பதாகவும், அதனைப் போக்கத் தலைவன் தலைவியை விரைவில் திருமணம் செய்துபொள்ள வேண்டும் என்றும் தலைவி கூறுவதாகப் பாடல் செல்கிறது) [1]

ஒப்பிட்டு நோக்கத் தக்கவை
ஊணூர்
நெல்லை மாவட்டம், நாங்குநேரி வட்டம், கூந்தன்குளம் என்னும் ஊர் இந்நாளில் பன்னாட்டுப் பறவைகள் வந்து கூடும் பறவையடியாக (பறவைச் சரணாலயமாக) விளங்குகிறது
பொறையாறு – பெயர் ஒப்புமை

அடிக்குறிப்பு தொகு

  1. பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான் பரியுடை நற்றேர்ப் பெரியன் விரியிணர்ப் புன்னையங்கானல் புறந்தை முன்றுறை வம்ப நாரை இனன் ஒலித்து அன்ன - உலோச்சனார் பாடல் அகநானூறு 100
"https://ta.wikipedia.org/w/index.php?title=புறந்தை&oldid=901538" இலிருந்து மீள்விக்கப்பட்டது