புலாண்ட் தர்வாசா

புலந்த் தர்வாசா (Buland Darwaza, இந்தி: बुलंद दरवाज़ा) என்பது, பாரசீக மொழியில் "பெரு வாயில்" என்னும் பொருள் கொண்டது. இந்தியாவின், ஆக்ராவில் இருந்து 43 கிலோமீட்டருக்கு அப்பால் அமைந்துள்ள ஃபத்தேப்பூர் சிக்ரியில் அமைந்துள்ள இது, உலகின் மிகப் பெரிய வாயில் கட்டிடம் ஆகும்.

சூரியன் மறையும் நேரத்தில் புலாண்ட் தர்வாசாவின் தோற்றம்.

வரலாறு தொகு

இது குசராத்தைக் கைப்பற்றியதன் நினைவாக பேரரசர் அக்பரால் 1602 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. கிழக்குப் பக்கத்திலுள்ள வாயிலின் வளைவில் வைக்கப்பட்டுள்ள பாரசீக மொழிக் கல்வெட்டொன்று 1601 ஆம் ஆண்டில் அக்பர் தக்காணத்தைக் கைப்பற்றியமை பற்றிக் குறிப்பிடுகிறது.

கட்டிடக்கலை தொகு

53.63 மீட்டர் உயரமும், 35 மீட்டர் அகலமும் கொண்ட இந்த வாயில் 42 படிகளைக் கொண்டுள்ளது. உலகின் மிகப் பெரிய வாயிலான இது முகலாயக் கட்டிடக்கலையின் பிரமிக்கத்தக்க எடுத்துக்காட்டு ஆகும். இக் கட்டிடம் சிவப்ப்ய் மணற்கல்லால் கட்டப்பட்டு வெண் சலவைக்கல் உட்பதிப்புக்களைக் கொண்டது.

புலாண்ட் தர்வாசா மசூதியின் முற்றத்தில் உயர்ந்து நிற்கிறது. இது அரகுறை எண்கோண வடிவம் கொண்டது. இக் கட்டிடம் தொடக்ககால முகலாயர் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டு ஆகும். குர் ஆனின் வசனங்கள் பொறிக்கப்பட்ட எளிமையான அழகூட்டல்களுடன், உயர்ந்த வளைவு வழிகளையும் இது கொண்டுள்ளது.

மேலும் படங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புலாண்ட்_தர்வாசா&oldid=2626669" இலிருந்து மீள்விக்கப்பட்டது