புல்புல் சர்மா

இந்திய எழுத்தாளர், ஓவியர்

புல்புல் சர்மா (Bulbul Sharma) (பிறப்பு 14 அக்டோபர் 1952) ஓர் இந்திய ஓவியரும், எழுத்தாளருமாவார். இவர் தற்போது புது தில்லியில் இருக்கிறார்.[1] [2] [3] தற்போது, இவர் குழந்தைகளுக்கான புதிய இலக்கியச் சிறுகதைகளின் தொகுப்பில் பணிபுரிகிறார்.[4]

புல்புல் சர்மா
பிறப்புபுல்புல் சர்மா
14 அக்டோபர் 1952 (1952-10-14) (அகவை 71)
புது தில்லி, இந்தியா
குடியுரிமைஇந்தியர்
பணிஓவியர், எழுத்தாளர்

சுயசரிதை தொகு

சர்மா புதுதில்லியில் பிறந்தார். தனது குழந்தைப்பருவ நாட்களின் பெரும்பகுதியை மத்தியப் பிரதேசத்தின் பிலாய் என்ற எஃகு நகரத்தில் கழித்தார்.[5] 1972இல் புதுதில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஊருசிய மொழியிலும், இலக்கியத்திலும் பட்டப்படிப்பை முடித்தார்.[1] அதன் பிறகு உயர்கல்விக்காக மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். [5]

1973இல் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு, இவர் ஓவியம் வரைவதைத் தொடர்ந்தார். புதுதில்லியில் உள்ள கலைஞர்களுக்கான வளாகமான காவ்ரியில் சேர்ந்தார்.[6] 1985-ல் தான் எழுத்தை தனது முழுநேர தொழிலாக எடுத்தார்.[5] இவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தனது ஓவியங்களின் பல கண்காட்சிகளை நடத்தினார். இவரது ஓவியங்கள் தேசிய நவீன கலைக்கூடம், லலித் கலா அகாதமி, சண்டிகர் அருங்காட்சியகம்,[4] யுனிசெஃப் நோராட், தேசிய சுகாதார நிறுவனம், வாசிங்டன், நேரு மையம், லண்டன்[1] ஆகியவற்றில் இடம் பெற்றன.

இவர் ஸ்டேட்ஸ்மேன் என்ற பத்திரிக்கையில் வாராந்திர பத்திகளை எழுதத் தொடங்கினார். பல்வேறு வெளியீட்டாளர்களுக்கான குழந்தைகள் புத்தகங்களையும் திருத்தினார். [5]

இவரது கதைகள் பிரான்சிய மொழி, இத்தாலிய மொழி, இடாய்ச்சு, பின்னிய மொழி போன்றவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[4] இவரது மற்ற விருப்பங்களில் ஊனமுற்ற குழந்தைகளுக்கு பறவைகளைப் பார்க்கவைப்பதும் , கற்பிப்பதும் ஆகியவை அடங்கும்.[6]

புத்தகங்கள் தொகு

சர்மா கடந்த 15 வருடங்களாக சிறப்பு குழந்தைகளுக்கான கலை மற்றும் கதை சொல்லும் பட்டறைகளை நடத்தியுள்ளார். இவர் சிறுகதைத் தொகுப்புகளுடன் தொடங்கி பின்னர் புதினங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்களை நோக்கி முன்னேறினார்

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 Seth, Anurag-Gargi. "Bulbul Sharma @ IndianArtCircle.com". www.indianartcircle.com. Archived from the original on 9 August 2018. பார்க்கப்பட்ட நாள் 6 November 2017.
  2. "Bulbul Sharma". https://timesofindia.indiatimes.com/litfest/delhi-litfest-2016/speakers/Bulbul-Sharma/articleshow/54977212.cms. 
  3. "Bulbul Sharma". http://youngindiabooks.com/author/bulbul-sharma. 
  4. 4.0 4.1 4.2 "Bulbul Sharma – Penguin India" இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171107010215/https://penguin.co.in/author/bulbul-sharma/. 
  5. 5.0 5.1 5.2 5.3 Sanga, Jaina C. (2003). South Asian Novelists in English: An A-to-Z Guide (in ஆங்கிலம்). Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780313318856.
  6. 6.0 6.1 "Bulbul Sharma: An artist who paints as vividly with words". http://indiatoday.intoday.in/story/bulbul-sharma-an-artist-who-paints-as-vividly-with-words/1/275093.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்புல்_சர்மா&oldid=3350542" இலிருந்து மீள்விக்கப்பட்டது