புள்ளலூர் அல்லது பொள்ளிலூர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். இந்தச் சிற்றூரில் மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போர்கள் நடைபெற்றுள்ளன: 611-12-இல் பல்லவ அரசன் மகேந்திரவர்மனுக்கும் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசிக்கும் இடையே நடந்த புள்ளலூர்ப் போர், ஐதர் அலிக்கும் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் இடையே நடந்த இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போரின் 1780, 1781 பொள்ளிலூர் போர்கள்.

புள்ளலூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்2,690
மொழிகள்
 • அலுவல் முறைதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

மக்கள்தொகை தொகு

புள்ளலூரின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2,690; இதில் ஆண்கள் 1315 பெண்கள் 1375. பாலின வீதம் 1046 மற்றும் படிப்பறிவு வீதம் 63.52

உசாத்துணை தொகு

  • "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2011-02-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளலூர்&oldid=3737360" இலிருந்து மீள்விக்கப்பட்டது