புவனேந்திரன் ஈழநாதன்

தமிழ் எழுத்தாளர்

புவனேந்திரன் ஈழநாதன் (பிறப்பு: யூன் 20, 1981) இணைய எழுத்தாளரும், தமிழ் வலைபதிவுலகில் நன்கறியப்பட்ட ஆரம்பகால வலைப்பதிவரும், நூலகத் திட்ட உருவாக்கத்தின் காரணியுமானவர்.

புவனேந்திரன் ஈழநாதன்
பிறப்பு20 யூன் 1981
உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
இறப்பு30 செப்டெம்பர் 2012
தேசியம்இலங்கை, சிங்கப்பூர்
மற்ற பெயர்கள்ஈழநாதன், ஈழவன்
கல்விபொறியியல்
பணிபொறியியலாளர், எழுத்தாளர்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

இலங்கை, யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, இலக்கனாவத்தை எனும் இடத்தைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூரை வதிவிடமாகவும் கொண்டிருந்தார்.

நூலகத் திட்ட உருவாக்கம் தொகு

ஈழத்தமிழர்களின் எழுத்து இலக்கியங்கள், ஆளுமைகள் காலத்தால் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் நோக்கிலும் அவை எமது அடுத்த தலைமுறையினரும் பயன்படும் வகையில் அமைய வேண்டும் என்பதிலும் முனைப்புடன் செயல்பட்ட அவர், நூலகத் திட்ட உருவாக்கத்தின் எண்ணக் கருவாக இருந்தார். நூலகத் திட்டத்தின் தொடக்க உறுப்பினர்களுள் ஒருவராக செயலாற்றியதுடன், முதலாவது வழங்கி, முதலாவது நிதிப் பங்களிப்பு போன்றவற்றை வழங்கி அத்திட்டத்தை முன்னெடுத்தவராவர். உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழரிடம் நூலகத் திட்டத்தை கொண்டு சென்றமையிலும் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

2008ம் ஆண்டு நூலகம் நிறுவனமாக இயங்கத் தொடங்கியபோது அதன் முதலாவது அறங்காவலர் அமைப்பிலும் இருந்து பங்காற்றினார்.

தமிழ் வலைப்பதிவுலகில் தொகு

தமிழ் வலைப்பதிவுலகில் 2004ம் ஆண்டு முதல் "ஈழநாதன்" எனும் பெயரில் வலைப்பதிவுகளில் ஈழத்துத் தமிழ் இலக்கியங்களை வெளிக்கொணரும் வகையில் எழுத்துப் பணியினை செய்து வந்தார். மற்றும் யாழ் குழுமத்தில் "ஈழவன்" எனும் பெயரில் பங்களிப்பு செய்தவராவர்.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவனேந்திரன்_ஈழநாதன்&oldid=2767769" இலிருந்து மீள்விக்கப்பட்டது