பூச்சியுண்ணி

பூச்சிகளை உண்ணும் உயிரினம்

பூச்சியுண்ணி (Insectivore) என்பது பெரும்பாலும் பூச்சிகளையே தம் உணவாகக் உட் கொள்ளும் விலங்கு வகை ஆகும். பூச்சிகளை உண்ணுவதால் இவைகளும் ஒரு வகையான ஊனுண்ணிகளே. பலவகையான பறவைகள், தவளை, பல்லி முதலியன பூச்சியுண்ணிகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும். இவ் விலங்குகள் தமக்குத் தேவையான புரதச் சத்தை பூச்சிகளை உண்வதால் பெருமளவு பெறுகின்றன.

படத்தில் காட்டப்பட்டுள்ள தவளை போன்ற விலங்குகள் பூச்சியுண்ணிகளாகும்
Drosera capensis எனப்படும் தாவரம் வளைந்து பூச்சியைப் பிடிப்பதை காட்டும் படம்.

சதுப்பு நிலத்தில் வாழும் சில தாவரங்கள் ஊட்டச்சத்தைப் பெறும் பொருட்டு பூச்சிகளைக் கவர்ந்திழுத்து உண்கின்றன.

மனிதனும் சிலசமயங்களில் ஒரு பூச்சி உண்ணியாக இருக்கின்றான்[1][2]. மனிதரில் இந்த பூச்சியுண்ணும் பழக்கத்தை ஆங்கிலத்தில் Entomophagy[3] என அழைக்கின்றனர்[4]. தாய்லாந்து, சீனா, யப்பான், பிரேசில், மெக்சிகோ, கானா போன்ற நாடுகளில் பூச்சியுண்ணும் பழக்கம் அதிகளவில் காணப்படுகின்றது[2]. ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மத்தியிலும் பூச்சியுண்ணும் பழக்கம் காணப்படுகின்றது. தமிழக நாட்டுப் புறங்களில் ஈசல் பூச்சிகளை வறுத்துண்ணும் வழக்கம் உள்ளது.

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூச்சியுண்ணி&oldid=2740694" இலிருந்து மீள்விக்கப்பட்டது