பூமி சாஸ்திரம் (நூல்)

பூமி சாஸ்திரம் என்பது 1832 ஆம் ஆண்டு இரேனியசு பாதிரியரால் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூல் ஆகும். தமிழில் புவியியல் துறையில் வெளிவந்த முதல் நூல்களில் இதுவும் ஒன்று. இந்த நூலில் சமக்கிருதக் கலைச்சொற்கள் பரவலாக எடுத்தாளப்பட்டுள்ளன.[1]

அமைப்பு தொகு

இந்த நூல் ஆறு பகுதிகளையும் 534 பக்கங்களையும் கொண்டது.[2]

  • முதலாம் பகுதி - ஆசியக் கண்டம்
  • இரண்டாம் பகுதி - ஐரோப்பாக் கண்டம்
  • மூன்றாம் பகுதி - ஆப்பிரிக்க கண்டம்
  • நான்காம் பகுதி - அமெரிக்கக் கண்டம்
  • ஐந்தாப் பகுதி - அசுத்திரேலியா, தென் கடல் தீவுகள்
  • ஆறாம் பகுதி - சுட்டு, திருத்தங்கள்

உள்ளடக்கம் தொகு

புவியின் மக்கள் வாழும் ஒவ்வொரு கண்டத்தின் புவியியல், நாடுகள், காலநிலை, மக்கள், உயிரின விபரங்கள் இந்த நூலில் குழந்தைகள் புரிந்து கொள்ளக்கூடிய தமிழில் எழுதப்பட்டுள்ளது. பின்னாளில் பரந்த பயன்பட்டுக்கு வந்த பல கலைச்சொற்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள் தொகு

  1. இராம. சுந்தரம். (2009). தமிழ் வளர்க்கும் அறிவியல். சென்னை: நியூ செஞ்சரி புக் கவுசு.
  2. 2.0 2.1 Annotated bibliography for Tamil studies conducted by Germans in Tamilnadu during 18th and 19th centuries: A Virtual Digital Archives Project. பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் - Compiled by Prof. C.S. Mohanavelu.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமி_சாஸ்திரம்_(நூல்)&oldid=3222250" இலிருந்து மீள்விக்கப்பட்டது