பெங்குலு அருங்காட்சியகம்

பெங்குலு அருங்காட்சியகம் (Bengkulu Museum) இந்தோனேசியாவில் பெங்குலுவில் என்னும் இடத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இது பெங்குலு மாநில அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த அருங்காட்சியகத்தில் ,இந்தோனேசியாவின் பெங்குலு பகுதியைச் சேர்ந்த உள்ள ஒவ்வொரு இனத்தினைச் சார்ந்த வரலாற்று கலைப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய பண்பாடு தொடர்பான கலைப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. [1] [2] திருமணம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான ஆடை உள்ளிட்ட பொருள்கள், வீட்டில் பயன்படுத்தி வருகின்ற உபகரணங்கள், பாரம்பரிய ஆயுதங்கள், பாரம்பரிய வீடுகள், கா நாகா கா எனப்படுகின்ற கடிதங்களை எழுதுதல் தொடர்பானவை மற்றும் கற்காலம் முதல் வெண்கல காலம் வரையான காலத்தைச் சேர்ந்த வரலாற்றுக்கு முந்தைய நாகரிகம் தொடர்பான நினைவுச் சின்னங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. மேலும், இங்கு பின்னலால் ஆன ஆடைகளும் காட்சியில் உள்ளன. அவ்வாறான ஆடைகள் எங்கனோ சமூகத்தைச் சார்ந்தவையாகக் கருதப்படுகின்றன. அருங்காட்சியகம் தினமும் காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை திறந்திருக்கும். சனி மற்றும் ஞாயிறு தவிர[3]

குறிப்புகள் தொகு

  1. "Museum Negeri Provinsi Bengkulu". Bengkulu-online.com. Archived from the original on 15 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 14 May 2014.
  2. "Museum Negeri Provinsi Bengkulu". asosiasimuseumindonesia.org. பார்க்கப்பட்ட நாள் 14 May 2014.
  3. "Bengkulu Museum". Archived from the original on 12 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 22 December 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)