பெடோம் பவளப்பாம்பு

பெடோம் பவளப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எலாப்பிடே
பேரினம்:
கல்லியோபிசு
இனம்:
க. பெட்டோமி
இருசொற் பெயரீடு
கல்லியோபிசு பெட்டோமி
(சுமித், 1943)[2]
வேறு பெயர்கள்
  • கலோபிசு பெட்டோமி
    சுமித், 1943
  • மாடிகோரா பெட்டோமி
    — வெல்ச், 1994
  • கல்லியோபிசு பெட்டோமெய்
    — :fr:தாசு, 1996[2]

பெடோம் பவளப்பாம்பு (Beddome's coral snake)(கல்லியோபிசு பெட்டோமி) என்பது எலாபிடே குடும்பத்தில் உள்ள ஒரு நச்சுப் பாம்பு ஆகும். இந்த சிற்றினம் தீபகற்ப இந்தியாவின் மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.

சொற்பிறப்பியல் தொகு

இங்கிலாந்து தரைப்படை அதிகாரியும் இயற்கை ஆர்வலர் ரிச்சர்ட் என்றி பெடோம் (1830-1911) என்பவரின் நினைவாக இந்தப் பாம்பிற்கு க. பெட்டோமி எனப் பெயரிடப்பட்டது.[3]

புவியியல் வரம்பும் வாழிடமும் தொகு

பெடோம் பவளப்பாம்பு இந்தியாவின் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சுமார் 550–1,100 m (1,800–3,610 அடி) உயரத்தில் பகுதி-பசுமை மற்றும் வெப்பமண்டல உலர் இலையுதிர் மலைகளில் காணப்படுகிறது. சேர்வராயன் மலைகள் அல்லது ஏற்காட்ய் மலையிலிருந்து முதலில் விவரிக்கப்பட்ட இந்த சிற்றினம் பின்னர் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பிற பகுதிகளிலிருந்து அறியப்பட்டது. கொப்பா, நீலகிரி மலைகள் மற்றும் சேர்வராயன் ஆகிய மூன்று பகுதிகளிலிருந்து மட்டுமே இது காணப்படுவதாக அறியப்படுகிறது.

விளக்கம் தொகு

க. பெட்டோமி 50 cm (20 அங்) நீளம் வரை வளரலாம். இதன் வாலின் நீளம் 6.5 cm (2.6 அங்) ஆகும்.[4]

நடத்தை தொகு

க. பெட்டோமி தரைவாழ் விலங்கு ஆகும்.

இனப்பெருக்கம் தொகு

க. பெட்டோமி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் வகையினைச் சார்ந்தது .

அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு தொகு

க. பெட்டோமி வணிகப் பயன்பாட்டிற்காக வேட்டையாடப்படுவதில்லை. பாதுகாக்கப்பட்ட எந்தப் பகுதிகளிலிருந்தும் இதுவரை அறியப்படவில்லை. இருப்பினும், இது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972-ன் அட்டவணை IV-ல் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Ganesh, S.R. (2021). "Calliophis beddomei". IUCN Red List of Threatened Species 2021: e.T172615A158392318. doi:10.2305/IUCN.UK.2021-2.RLTS.T172615A158392318.en. https://www.iucnredlist.org/species/172615/158392318. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. 2.0 2.1 Calliophis beddomei at the Reptarium.cz Reptile Database. Accessed 24 January 2014.
  3. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011).
  4. Smith MA (1943).

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெடோம்_பவளப்பாம்பு&oldid=3642092" இலிருந்து மீள்விக்கப்பட்டது