பெயா லாகசு (Feia Lacus) என்பது சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் நிலவில் காணப்படும் ஐதரோகார்பன் ஏரிகளில் ஒன்றாகும் [1] கேசினி விண்வெளி ஆய்வுக்கலம் கண்டறிந்து அனுப்பிய தரவுகளின் அடிப்படையில் இந்த ஏரிக்கு 2007 [2] ஆம் ஆண்டு பெயா லாகசு எனப் பெயரிடப்பட்டது.

73.7° மற்றும் 64.41° மே என்ற அடையாள ஆள்கூறுகளில் 47 கிலோமீட்டர் நீளத்திற்கு பெயா லாகசு ஏரி அமைந்துள்ளது. பிரேசில் நாடிலுள்ள இலகோவா பெயா ஏரியின் நினைவாக இந்த ஏரிக்கு பெயா லாகசு என்று பெயரிடப்பட்டது. திரவ ஈத்தேனும் மீத்தேனும் [3] சேர்ந்து இந்த ஏரியை உருவாக்கியுள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. Map of the liquid bodies in the north polar region of Titan.
  2. Twelve New Names Approved for Use on Titan.
  3. Coustenis, A.; Taylor, F. W. (21 July 2008). Titan: Exploring an Earthlike World. World Scientific. pp. 154–155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-281-161-5. இணையக் கணினி நூலக மைய எண் 144226016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெயா_லாகசு&oldid=2173854" இலிருந்து மீள்விக்கப்பட்டது