பெருநகர் பிரம்மபுரீசுவரர் கோயில்

பெருநகர் பிரம்மபுரீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம் தொகு

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் வட்டத்தில் மானாம்பதி அருகில் பெருநகர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இத்தலம் பிரம்மபுரம், சதுரானனம், சங்காரானனம், பிரம்மபுரம் என்று பலவாறான பெயர்களில் அழைக்கப்படுகிறது.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 103 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°39'06.3"N, 79°39'38.0"E (அதாவது, 12.651750°N, 79.660567°E) ஆகும்.

இறைவன், இறைவி தொகு

இக்கோயிலின் மூலவராக பிரம்மீசர் உள்ளார். இங்குள்ள இறைவி பட்டுவதனாம்பிகை ஆவார். இத்தலத்தின் மரம் வன்னி ஆகும். கோயில் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகும். தை மாதம் பிரம்மோற்சவம், தைப்பூசம், மாசி மகம், சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.[1]

அமைப்பு தொகு

ஊரின் வடகிழக்கில் இக்கோயில் தெற்கில் நுழைவாயிலைக் கொண்டுள்ளது. ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் கோயில் உள்ளது. முதல் திருசசுற்றில் சிங்கத்தூண் மண்டபத்தில் சக்கர விநாயகர், கோயில் குளம், கோயில் மரம், நந்தி மண்டபம், அலங்கார மண்டபம் ஆகியவை உள்ளன. மகாமண்டபம், நவக்கிரக சன்னதியை அடுத்து பலி பீடமும் சிங்க மண்டபமும் உள்ளன. மூலவர் சன்னதி கஜபிருஷ்ட வடிவில் உள்ளது. உட்பிரகார ஈசான மூலையில் பைரவர் உள்ளார். மூன்றாவது திருச்சுற்றில் அஷ்ட நாகங்களான அனந்தன் வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்கன், பத்மன், மகாபத்மன், குளிகன் ஆகியோர் உள்ளனர்.[1]

மேற்கோள்கள் தொகு