பெரும் கோலாலம்பூர்

பெரும் கோலாலம்பூர் (ஆங்கிலம்: Greater Kuala Lumpur மலாய்: Kuala Lumpur Raya) என்பது மலேசியாவில் உள்ள பெருநகர கோலாலம்பூரின் எல்லைகளை நிர்ணயிக்கும் புவியியல் சொல் ஆகும். இது பெரும்பாலும் கிள்ளான் பள்ளத்தாக்கு நிலப்பகுதியுடன் ஒத்திருந்தாலும் சில வேறுபாடுகள் உள்ளன.

பெரும் கோலாலம்பூர்
Greater Kuala Lumpur
பெருநகரப் பகுதி
பெரும் கோலாலம்பூரின் செயற்கைக்கோள் காட்சி
நாடு மலேசியா
பரப்பளவு
 • மொத்தம்5,194.72 km2 (2,005.69 sq mi)
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்8,455,029
 • அடர்த்தி2,708/km2 (7,010/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம்
மலேசியத் தொலைபேசி எண்03

இந்தப் பெரும் கோலாலம்பூர் நிலப்பரப்பு, கிள்ளான் பள்ளத்தாக்கு; சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயாவின் கூட்டாட்சி பிரதேசங்கள்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மேற்கில் உள்ள மலேசியா வியூகப் பள்ளத்தாக்கு (Malaysia Vision Valley) (MVV) பகுதி; மற்றும் பகாங் மாநிலத்தின் மேற்கில் உள்ள பெந்தோங் பகுதி போன்றவற்றை உள்ளடக்கியதாகும். இதன் பரப்பளவு 2,793.27 சதுர கிமீ ஆகும்.[1]

பொது தொகு

தேசிய வளர்ச்சிக் கூட்டமைப்பு (Konurbasi Pertumbuhan Nasional) என்றும் அழைக்கப்படுகிறது. இது மலேசியாவின் மிகப் பெரிய பெருநகரப் பகுதியாகும். மேலும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாகும்.

கோலாலம்பூரைச் சுற்றியுள்ள 14 நகராட்சிகளின் மொத்தப் பரப்பளவைக் கொண்டதாகப் பெரும் கோலாலம்பூர் வரையறுக்கப்பட்டு உள்ளது.[2][3][4][5]

பெரும் கோலாலம்பூர் பகுதியில் உள்ள 14 நகராட்சிகள்:

கோலாலம்பூர் பெருநகரத்தில் உள்ள நகரங்கள் தொகு

பயன்பாடு தொகு

பெரும் கோலாலம்பூர் எனும் பயன்பாடு அண்மையில்தான் புழக்கத்திற்கு வந்துள்ளது. முன்பு கிள்ளான் பள்ளத்தாக்கு என்றே பெரும்பாலும் அறியப்பட்டது. 2010-ஆம் ஆண்டில் மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக், வெளியிட்ட பொருளியல் நிலைமாற்றத் திட்டத்தின் ஊரக மாநகரம் உருவாக்கல் மூலம், பொருளியல் வளர்ச்சியைத் தூண்டும் வண்ணம் இந்தச் சொல்லை பரப்புரை செய்தார்.

புள்ளிவிவரம் தொகு

2010-ஆம் ஆண்டில் பெரும் கோலாலம்பூரின் மக்கள் தொகை ஆறு மில்லியன் என மதிப்பிடப்பட்டு உள்ளது. நாட்டின் மொத்த வருமானத்திற்கு இந்தப் பகுதி RM 263 பில்லியன் பங்களித்துள்ளது.

காட்சியகம் தொகு

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "The Straits Times Singapore".
  2. "The Malaysia Digest". Archived from the original on 2011-03-09.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "Sendayan TechValley".
  4. "IMAGE: Urban Hierarchy of Peninsular Malaysia-Conurbation regional planning" – via ResearchGate.
  5. "Kawasan Pertumbuhan Utama Pemangkin Pembangunan Negara".
  6. "The Malaysia Digest".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்_கோலாலம்பூர்&oldid=3636766" இலிருந்து மீள்விக்கப்பட்டது