பெர்க்கிலியம்(III) புளோரைடு

வேதிச் சேர்மம்

பெர்க்கிலியம்(III) புளோரைடு (Berkelium(III) fluoride) BkF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். பெர்க்கிலியம் மற்றும் அயோடின் தனிமங்கள் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2][3]

பெர்க்கிலியம்(III) புளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பெர்க்கிலியம் முப்புளோரைடு
இனங்காட்டிகள்
20716-88-5
InChI
  • InChI=1S/Bk.3FH/h;3*1H/q+3;;;/p-3
    Key: DAFXIOTWBMWEKP-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
  • [Bk+3].[F-].[F-].[F-]
பண்புகள்
BkF3
வாய்ப்பாட்டு எடை 304.00 g·mol−1
தோற்றம் மஞ்சள்-பச்சை திண்மம்
அடர்த்தி 9.70 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு தொகு

600 பாகை செல்சியசு வெப்பநிலையில் பெர்க்கிலியம்(III) ஆக்சைடுடன் ஐதரசன், ஐதரசன் புளோரைடு கலந்த வாயுக் கலவையை சேர்த்து சூடாக்கினால் பெர்க்கிலியம்(III) புளோரைடு உருவாகிறது.[4]

இயற்பியல் பண்புகள் தொகு

பெர்க்கிலியம் முப்புளோரைடு இரண்டு வகையான கட்டமைப்புகளுடன் மஞ்சள்-பச்சை திண்மப் பொருளாக உருவாகிறது.[5] குறைந்த வெப்பநிலையில், இது செஞ்சாய்சதுர (YF3 அமைப்பு) கட்டமைப்பில் அணிக்கோவை அளவுருக்கள் a = 670 பைக்கோ மீட்டர், b = 709 பைக்கோ மீட்டர் மற்றும் c = 441 பைக்கோ மீட்டர் என்ற அளவுருக்களுடன் படிகமாகிறது. உயர் வெப்பநிலையில், இது முக்கோண வடிவ (LaF3 அமைப்பு) அமைப்பில் அணிக்கோவை அளவுருக்கள் a = 697 பைக்கோ மீட்டர் மற்றும் c = 714 பைக்கோ மீட்டர் அளவுருக்களில் படிகமாகிறது. பெர்க்கிலியம் முப்புளோரைடின் நிலைமாறு வெப்ப அளவு 350-600 பாகை செல்சியசு வெப்பநிலைகளுக்கு இடையில் அமைகிறது.[6][7]

வேதிப் பண்புகள் தொகு

பெர்க்கிலியம் முப்புளோரைடு இலித்தியம் உலோகத்தால் குறைக்கப்பட்டு உலோக பெர்க்கிலியம் பெறப்படுகிறது:

BkF3 + 3Li → Bk + 3LiF

மேற்கோள்கள் தொகு

  1. Peterson, J. R.; Cunningham, B. B. (1 August 1968). "Crystal structures and lattice parameters of the compounds of berkelium—IV berkelium trifluoride" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 30 (7): 1775–1784. doi:10.1016/0022-1902(68)80353-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022190268803537?via%3Dihub. பார்த்த நாள்: 11 April 2023. 
  2. Edelstein, Norman M. (11 September 2013). Actinides in Perspective: Proceedings of the Actinides—1981 Conference, Pacific Grove, California, USA, 10-15 September 1981 (in ஆங்கிலம்). Elsevier. p. 334. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-9051-8. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
  3. "WebElements Periodic Table » Berkelium » berkelium trifluoride". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
  4. Mi͡asoedov, Boris Fedorovich (1974). Analytical Chemistry of Transplutonium Elements (in ஆங்கிலம்). Wiley. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-62715-0. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
  5. Ahrland, S.; Bagnall, K. W.; Brown, D. (7 June 2016). The Chemistry of the Actinides: Comprehensive Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-5934-8. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
  6. Peterson, J. R.; Fahey, J. A.; Baybarz, R. D. (1 October 1971). "The crystal structures and lattice parameters of berkelium metal" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 33 (10): 3345–3351. doi:10.1016/0022-1902(71)80656-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022190271806565?via%3Dihub. பார்த்த நாள்: 11 April 2023. 
  7. Ensor, D. D.; Peterson, J. R.; Haire, R. G.; Young, J. P. (1 January 1981). "Absorption spectrophotometric study of berkelium(III) and (IV) fluorides in the solid state" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 43 (5): 1001–1003. doi:10.1016/0022-1902(81)80164-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022190281801649?via%3Dihub. பார்த்த நாள்: 11 April 2023.