பெர்ரோ மாலிப்டினம்

பெர்ரோ மாலிப்டினம் (Ferro molybdenum) என்பது ஒரு முக்கியமான இரும்பு-மாலிப்டினம் உலோகக் கலவையாகும். இவ்வுலோகக் கலவையில் 60-75% மாலிப்டினம் கலந்துள்ளது [1]. உயர்-வலிமை குறைந்த- எஃகு -உலோகக்கலவை தயாரிப்பதற்கான மாலிப்டினத்திற்கு முக்கிய ஆதாரமாக இச்சேர்மம் உள்ளது.

தயாரிப்பு தொகு

மாலிப்டினம்(VI) ஆக்சைடு (MoO3), அலுமினியம், இரும்பு முதலியவற்றை சேர்த்து சூடுபடுத்துவதால் பெர்ரோ மாலிப்டினம் உலோகக் கலவையைத் தயாரிக்கலாம் [2] . ஆக்சைடும், அலுமினியமும் இணைந்து அலுமினோதெர்மிக் வினையின் மூலமாக களத்தில் மாலிப்டினம் உருவாகிறது. பெர்ரோ மாலிப்டினம் உலோகக் கலவையை எலக்ட்ரான் கற்றை உருக்குதல் முறையில் தூய்மைப்படுத்த முடியும். வார்ப்புரு தயாரிப்பதற்கு முன்பு உருகிய எஃகுடன் பெர்ரோமாலிப்டினம் சேர்க்கப்படுகிறது. ஐரோப்பாவில் உள்ள ஆங்கிலேய வர்த்தக நிறுவனமான தெரெக் இராபெல் அண்டு கோ லிமிட்டெடு, செருமானிய வர்த்தக நிறுவனமான தசில்தார்ப்பில் இருக்கும் கிரோண்டுமெட் நிறுவனம் ஆகியன பெர்ரோமாலிப்டினம் வினியோகத்தில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்களாக உள்ளன. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இருக்கும் இலாங்கிலோத் மெட்டர்லசிகல் நிறுவனம் மிகப்பெரிய பெர்ரோமாலிப்டின உற்பத்தி நிறுவனமாகத் திகழ்கிறது [3]

மேற்கோள்கள் தொகு

  1. C. K. Gupta (1992). Extractive Metallurgy of Molybdenum. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-4758-0. பார்க்கப்பட்ட நாள் 2008-11-03.
  2. Rudolf Fichte (2005), "Ferroalloys", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a10_305
  3. http://www.langeloth.com/

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்ரோ_மாலிப்டினம்&oldid=3564839" இலிருந்து மீள்விக்கப்பட்டது