பெலகாவி நலா

பெலகாவி நலா (Belagavi Nala) என்பது தென்னிந்தியாவின் கருநாடக மாநிலத்தில் ஓடும் ஒரு ஆறு ஆகும். இது கருநாடகம் மாநிலத்தின் பெல்காம் நகரத்தில் “லட்சுமி டெக்டி” என்ற இடத்தில் உருவாகிறது.[1] கடந்த காலங்களில் இந்த ஆறு பெருக்கெடுத்து வந்த பொழுது மிகுந்த பேரழிவை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த ஆறு நகரத்தின் தென்கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து முகாம், தொடருந்துநிலையச் சாலை, சாஸ்திரி நகர், சிவாஜி தோட்டம் மற்றும் பெல்காம் நகர் வழியாக விசுவகர்மாநகர் பழைய பி பி சாலை வரை ஒடுகிறது. பெல்காம் நகரத்தில் பெலகாவி நலா ஆறு விவசாயிகளுக்குப் பெரும் துயரை ஏற்படுத்துகிறது.

பெலகாவி நலா
அமைவு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுலட்சுமி டெக்டி, பெல்காம், கருநாடகம், இந்தியா
 ⁃ ஏற்றம்760m
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
பெல்லாரி நலா, லட்சுமி நகர், பெல்காம் லட்சுமி நகர், பெல்காம், கருநாடகம், இந்தியா
 ⁃ உயர ஏற்றம்
740m
நீளம்10.5 km (6.5 mi)

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலகாவி_நலா&oldid=3828909" இலிருந்து மீள்விக்கப்பட்டது