பெல் மற்றும் ராசு

பெல் மற்றும் ராசு என்பது பாரிஸை தளமாகக் கொண்ட ஒரு பிரான்சு கைக்கடிகார நிறுவனமாகும். இது சுவிட்சர்லாந்தின் லா சாக்சு-டி-பாண்ட்சில் உற்பத்தி செய்கிறது.[1] 1992-ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், கடலில் சங்கு குளிப்பவர் போன்று நீர் மூழ்காளர் மற்றும் வானோடி போன்ற தொழில்முறை பயனர்களுக்காக சுவிசு கைக்கடிகாரத் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றது.[2]

பெல் மற்றும் ராசு (Bell & Ross)
வகைதனியார்
நிறுவுகை1992 (1992), பாரிஸ், பிரான்ஸ்
நிறுவனர்(கள்)புருனோ பெலமிச்
கார்லோஸ் ரோசில்லோ
தலைமையகம்பாரீஸ், பிரான்சு
அமைவிட எண்ணிக்கைலா செளக்சு டி பாண்ட்சு, சுவிட்சர்லாந்து
தொழில்துறைகடிகார உற்பத்தி
உற்பத்திகள்கைக்கடிகாரம்
இணையத்தளம்www.bellross.com

வரலாறும் உற்பத்தியும் தொகு

 
பெல் & ராஸ் பெரா01-94

பெல் மற்றும் ராசு 1992-ல் புருனோ பெலமிச் (பெல்) மற்றும் கார்லோசு ஏ. ரோசில்லோ (ரோஸ்) ஆகியோரால் பல்கலைக்கழக ஆய்வுத் திட்டமாக நிறுவப்பட்ட நிறுவனமாகும்.[3] இந்நிறுவனத்தின் கைக்கடிகாரங்கள் முதலில் ஜெர்மன் நிறுவனமான சின்னால் தயாரிக்கப்பட்டது. பின்னர் சேனல் சிறுபான்மை பங்குதாரராக ஆனதுடன் 2002-ல் கூட்டாண்மை சின் கூட்டமை விலக்கப்பட்டது. இந்நிறுவனமானது சுவிட்சர்லாந்திற்கு மாற்றப்பட்டது. 2005-ல் இதன் மாடல் பெரா-01-ல் தொடங்கி, வானூர்தி விமானியறையில் காணப்படும் கருவிகளை ஒத்த சதுர கடிகாரங்களைத் தயாரிக்கத் தொடங்கியது. இந்நிறுவனத்தின் சதுர-உறை பெரா மாதிரிகள் இதன் மிகவும் பிரபலமான வடிவமைப்பாக மாறியது.[4] இந்நிறுவனம் தமது மூன்று வகையான கைக்கடிகார உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது. அவை, வான் பயணம், கடற்பயணம் மற்றும் அனைத்து காலத்திற்கும் உகந்தன என்பதாகும்.[5] கைக்கடிகாரங்களின் வகைகள் அளவு, இயக்கம் மற்றும் வட்ட முகப்பு தளவமைப்பு ஆகியவற்றால் வேறுபடுகின்றன.[2][6]

கூட்டமைப்பு தொகு

1992-ல், பெல் மற்றும் ராசு பிரான்சு நாட்டு விமானப்படைக்கு வானோடிகளுக்கு கடிகாரங்களை வழங்கத் தொடங்கியது.[7][2] இந்த நிறுவனம் 2/4 லா பெயெட்டி பைட்டர் இகுவாட்ரான் மற்றும் பிரான்சு விண்வெளி திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ கடிகார வழங்குபவர் ஆனது.[3]

2016-ல், பெல் மற்றும் ராசு ரெனால்ட் ஸ்போர்ட் பார்முலா 1 குழுவுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.[8] பெல் மற்றும் ராசு ரெனால்ட் உடனான தங்கள் உறவைக் குறிக்கும் வகையில் சிறப்புப் பதிப்பு கைக்கடிகாரங்களை உருவாக்க இந்தக் கூட்டாண்மை வழிவகுத்தது. ரெனால்ட் ஆல்பைன் எப்1 டீம் என மறுபெயரிடப்பட்டு ஆல்பைன் எப் 1 டீம் கைக்கடிகார தொகுப்புகளை வெளியிட்டதால் பெல் மற்றும் ராசு ரெனால்ட்டுடன் இருந்தார்.[9]

சாதனை தொகு

பெல் மற்றும் ராசு விண்டேஜ் 123 ஜம்பிங் ஹவர் எனும் துள்ளல் மணி கைக்கடிகாரத்தினை 1992-ல் அறிமுகப்படுத்தியது.[1][10]

1994-ல் முதன் முதலாக விண்வெளிப் பயணி ஒருவர், பெல் மற்றும் ராசு தயாரித்த இசுபேசு 1 எனும் தானியங்கி காலமானியினை அணிந்தார்.[3][11]

பெல் மற்றும் ராசு கைட்ரோமேக்சு 11 100 எம் 1998-ல் 11,000 மீட்டர் ஆழ நீர்-எதிர்ப்பு கைக்கடிகாரம் எனும் கின்னஸ் உலக சாதனையினைப் படைத்தது.[1][3]

மேலும் பார்க்கவும் தொகு

  • பாம் மற்றும் மெர்சியர்
  • ப்ரீட்லிங் எஸ்.ஏ
  • ஒமேகா எஸ்.ஏ
  • டி ஏ ஜி ஹியூயர்
  • எம் பி & எப்
  • சேனல் ஜே12

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Bell & Ross Hodinkee, hodinkee.com, accessed 10/23/2018
  2. 2.0 2.1 2.2 Gene Stone; Stephen Pulvirent (13 November 2018). The Watch, Thoroughly Revised. Abrams. pp. 179–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-68335-335-5.
  3. 3.0 3.1 3.2 3.3 Behind the brand: Bell & Ross: What you need to know about the luxury watch house Josh Lee, Gentleman's Journal,
  4. A Military-Style Watch Ready for Battle or the Boardroom John Lyon, Robb Report, October 8, 2018
  5. Bell & Ross Launches New Website Hodinkee, Jason Heaton, May 18, 2011
  6. Stern, Jared Paul. "Bell & Ross + Renault F1 Join Forces For Racy Watch Collab". maxim.com. Maxim. பார்க்கப்பட்ட நாள் 2 December 2020.
  7. If You Want a Technical Watch, You Want the New Bell & Ross BR 05 பரணிடப்பட்டது 2020-11-26 at the வந்தவழி இயந்திரம் Esquire, 23 October 2020
  8. "Bell & Ross partner with Renault Sport Formula One Team". Time and Tide Watches (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). 2016-02-11. பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.
  9. Mike (2021-06-18). "Bell & Ross Marks The Return Of Alpine To F1 With Alpine F1 Team Watch Collection". Shouts (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.
  10. Bell & Ross WWI Heure Sautante Watches Hands-On A Blog to Watch, Ariel Adams, July 31, 2012
  11. Sheldrake, Russell. "How Bell & Ross became the choice watch for eccentric gentlemen". thegentlemansjournal.com. Gentleman's Journal.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்_மற்றும்_ராசு&oldid=3701448" இலிருந்து மீள்விக்கப்பட்டது