பெவல் நீர்த்தேக்கம்

பெவல் நீர்த்தேக்கம் (Bewl Water) என்பது தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள மிகப்பெரிய இயற்கை நீர்த்தேக்கம் ஆகும். இது இராயல் தன்பிரிட்ச் வெல்சுக்கு தென்கிழக்கில் ௰ கி.மி (10) தொலைவில் அமைந்திருக்கிறது.[1]

பெவல் நீர்த்தேக்கம்
கென்டு (Kent)
அமைவிடம்கென்ட்/கிழக்கு சசக்சு
ஆள்கூறுகள்51°04′12″N 0°23′42″E / 51.06997°N 0.39508°E / 51.06997; 0.39508
ஏரி வகைநீர்த்தேக்கம்
வடிநில நாடுகள்ஐக்கிய இராச்சியம்
இணையதளம்www.bewlwater.co.uk

வரலாறு தொகு

இங்கிலாந்தின் மேற்கு கென்ட் பகுதியில் ௲௯௱௬௰ இல் (1960) அதிகரித்து வரும் குடிநீரின் தேவைக்காக புதிதாக ஒரு மார்க்கம் தேடப்பட்டது. அப்போதைய மத்திய-கென்ட் குடிநீர் நிறுவனம் (இப்போது தென்கிழக்கு குடிநீர் நிறுவனம்) மற்றும் மெட்வே தண்ணீர் குழு (இப்போது தெற்கு குடிநீர் நிறுவனம்) இணைந்து மெட்வே ஆற்றுக் குடிநீர் திட்டத்தை அறிவித்தனர். இதற்கான அனுமதி ௲௯௱௬௰௮ இல் (1968) கோரப்பட்டது [2]

இத்திட்டத்தின் படி, பெவல் ஆற்றுப்படுக்கையின் குறுக்கில் ஒரு அணை கட்டப்பட்டு பெவல் மற்றும் டைசு நதிகளில் வரும் உபரி நீராதாரத்தின் மூலம் இவ்வணை நிரப்பப்பட்டது. இந்த பெவல் நீர்த்தேக்கம், இன்றும் எவ்விதத் தடையும் இன்றி இயங்கிவருகிறது. பெவல் நீர்தேக்கத்தின் அளவு வெம்ப்ளி கால்பந்தாட்ட மைதானத்தின் அளவைப் போல ௪௱௩௰௬ (436) மடங்குகள் ஆகும்.

முகவரி தொகு

பெவல் நீர்த்தேக்கம், இலாம்பர்கர்சுட், இங்கிலாந்து, TN3 8JH

மேற்கோள்கள் தொகு

  1. Davison, Ian (1998). "Bewl Water spillway investigation". In Tedd, Paul (ed.). The Prospect for Reservoirs in the 21st Century. London: Thomas Telford Publishing. p. 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0 7277 2704 4. பார்க்கப்பட்ட நாள் 2015-05-07.
  2. Chantler, Bob. Rother Country. p. 115. Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2015-05-07. {{cite book}}: Unknown parameter |deadurl= ignored (help)

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bewl Water
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெவல்_நீர்த்தேக்கம்&oldid=3610418" இலிருந்து மீள்விக்கப்பட்டது