பேச்சு:அகரவரிசை

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

அகரவரிசை என்பது ஆங்கிலத்தில் "Alphabetical order"ஐ அல்லவா குறிக்கும், கட்டுரையின் கருத்தும் அவ்வாறே கூறுகிறது. ஆனால் இக்கட்டுரையோ "en:Alphabet" என்னும் ஆங்கில விக்கியின் கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ளதேன்?--குமரன் (பேச்சு) 12:14, 3 ஆகத்து 2012 (UTC)Reply

நீங்கள் சொல்வது சரியே. இக்கட்டுரை அகரவரிசைக்கானது. நெடுங்கணக்கு (alphabet) இங்கு தவறாகவும் வழிமாற்றப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். நெடுங்கணக்கிற்குத் தனியே கட்டுரை எழுதலாமா?--Kanags \உரையாடுக 12:42, 3 ஆகத்து 2012 (UTC)Reply
ஆம், நெடுங்கணக்கிற்கு தனியாக கட்டுரை எழுதவேண்டும். வழிமாற்றலை நீக்கி புதிய கட்டுரையைத் தாங்கள் எழுதுமாறு கோருகிறேன்--குமரன் (பேச்சு) 12:49, 3 ஆகத்து 2012 (UTC)Reply
ஓர் ஐயம். அகரவரிசை, நெடுங்கணக்கு இரண்டும் ஒன்றுதானா. அல்லது வேறு வேறா? விக்சனரியில் alphabet இற்கு எழுத்து, அகரவரிசை, நெடுங்கணக்கு எனத் தரப்பட்டிருக்கிறது?--Kanags \உரையாடுக 13:37, 3 ஆகத்து 2012 (UTC)Reply
நெடுங்கணக்கு என்பதும் அகரவரிசையையே குறிக்கும். ---மயூரநாதன் (பேச்சு) 13:42, 3 ஆகத்து 2012 (UTC)Reply
நன்றி மயூரநாதன். அப்படியானால் நெடுங்கணக்கை இங்கு வழிமாற்றலாம்.--Kanags \உரையாடுக 13:47, 3 ஆகத்து 2012 (UTC)Reply
தெளிவுறுத்தியதற்கு நன்றி மயூரநாதன். அப்படியானால் alphabet என்பதற்கு சரியான தமிழ் பதம் என்ன? --குமரன் (பேச்சு) 16:01, 3 ஆகத்து 2012 (UTC)Reply
  • அரிச்சுவடி என்றால் சிறிய சுவடி என்று பொருள் (தொடக்க நிலை எளிய கல்வி என்பதும் பொருள்; "ஹரி" என்ற குழப்பமும் உண்டு). அகரவரிசை என்பது அ என்னும் எழுத்தில் இருந்து தொடங்குவது என்னும் பொருள். alphabet என்பதும் இந்த அ என்னும் எழுத்தில் தொடங்கி வரும் வரிசையையே குறிக்கும். ஆனால் மேற்கு உலக கணிப்பில் alphabet என்னும் முறை அகரம் தொடங்கி வரும் எழுத்துகளில் உயிரும் மெய்யும் மட்டுமே அடங்கியவை. (இலத்தீன், கிரேக்கம், பிற ஐரோப்பிய மொழிகள்). க, கி, கே போன்ற உயிர்மெய் எழுத்துகள் அடங்காது (இவை logosyllabic, syllabary என்றும் சொல்வார்கள்). தமிழ் தவிர்த்த இந்திய மொழிகளில் உயிரெழுத்துகளும், அகரமேறிய உயிர்மெய் எழுத்துகளும் மட்டுமே வரிசையில் அடங்கும். தமிழ் தவிர்த்த இந்திய மொழிகளில் (இந்தி, முதலானவை) தனிமெய் எழுத்துகள் கிடையாது. தமிழ் போல் ஆய்த எழுத்தும் கிடையாது. உயிர்மெய் எழுத்துகள் குறிக்கப்பெற்றாலும், அவற்றை தங்கள் எழுத்துகளின் வரிசையில் அடக்கார். தமிழ் தவிர்த்த இந்திய மொழிகள் அபுகிடா என்னும் வகையைச் சேர்ந்தவை. அபுகிடா வரிசை எனவே சொல்லலாம் (அப்படி ஒரு வழக்கம் இல்லை என்பதை அறிவேன்). அரபி போன்ற மொழிகள் அபுசாடு (Abjad) மொழிகள். அவற்றில் மெய்யெழுத்துகள் மட்டுமே உண்டு. இந்த அபுகிடா, அபுசாடு என்னும் முறையைப் பீட்டர் இடேனியல் என்பார் முன்வைத்தார். மிகப்பலரும் தவறுதலாகத் தமிழும் அபுகிடா என வகைப்படுத்துகின்றனர். இது தவறு என்று 2010 இல் செம்மொழி மாநாட்டில் நான் நிறுவினேன். பல மொழியியலாளர்களுடனும் உரையாடியுள்ளேன். யாரும் என் கருத்துக்குத் தக்க மறுப்புகள் சொல்லவில்லை. தமிழின் எழுத்துமுறை தமிழ் எழுத்துமுறை என்றே கூறுதல் வேண்டும், தனியாகக் குறித்தலும் வேண்டும். தமிழ்போல் எழுத்து என்பதை யாரும் (எந்த மொழியாளரும்) வரையறை செய்யவில்லை. இதை உணர்ந்தவர்களில் தமிழரல்லாதவர்களிடையே, இடாய்ச்சுலாந்தைச் சேர்ந்த உல்ரிக்கே நிக்கோலசு (Ulrike Niklas) ஒருவர்தான், நான் அறிந்த அளவிலே. தமிழில் நெடுங்கணக்கு என்பது 247 எழுத்துகளையும் வரிசைப்படுத்திக் காட்டும் வழக்கு. தமிழ் எழுத்துகள் 31 (12 உயிர்+ 18 மெய் + 1 ஆய்த எழுத்து) - இவை தவிர உயிர்மெய் எழுத்துகளைச் சார்பெழுத்தாகக் கொள்வர். இன்னும் குற்றியலுகரமும், குற்றியலிகரமும் தமிழில் சார்பெழுத்துகளே.). எனவே அகரவரிசை என்பதை அபுசாடு மொழிகளைத் தவிர தமிழ், அபுகிடா, ஆல்ஃவபெட்டு மொழிகள் யாவற்றுக்கும் வழங்கலாம். எழுத்துவரிசை என்பதைப் பொதுவாக எல்லா மொழிகளுக்கும் வழங்கலாம். நெடுங்கணக்கு என்பதையும் (தமிழையும் தாண்டி) பொதுமைப்படுத்தியும் கூற வழி உண்டு. தமிழில் ஒவ்வொரு எழுத்துக்கும் எவ்வளவு மாத்திரை என்றும், மூன்று அலகு மாத்திரை ஒரு எழுத்துக்குக் கிடையாது என்றும், உயிர்மெய் எழுத்து 1+0.5 மாத்திரை அன்று (தனி மெய் எழுத்துக்க்ய் அரை மாத்திரை, குற்றியலுகர உயிரெழுத்துக்கு ஒரு மாத்திரை எனினும் குற்றியலுகர உயிர்மெய்க்கு 1 மாத்திரைதான் என), அது ஒரு மாத்திரை என்றும் தெளிவாகக் கூறியுள்ளார்கள். ஐதரசனும் ஆக்சிசனும் சேர்ந்து நீராகும் பொழுது ஆற்றல் குறைப்பு ஏற்பட்டுப் பிணைவதைப் போன்றது இது!

--செல்வா (பேச்சு) 18:56, 3 ஆகத்து 2012 (UTC)Reply

Yes

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அகரவரிசை&oldid=1805621" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அகரவரிசை" page.