அதலை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

அருமையான கட்டுரை சுந்தர்! அதலைக்காய் பற்றி தெரிந்துகொண்டேன்! நன்றி!--செல்வா 19:44, 25 சூன் 2011 (UTC)Reply

நன்றி செல்வா. முன்பு எட்டயபுரத்தில் எங்கள் காட்டில் பருத்தி, கேழ்வரகு, சோளம் ஆகியவற்றைப் பயிரிட்டிருக்கும்போது வரப்பில் தானாக வளரும் அதலைக்கொடிகளில் இருந்து (தேள் கொட்டுவதையும் பொருட்படுத்தாமல்) அப்பா பறித்துக் கொண்டு வருவார். இத்தனை அருமையான உடல்நலப் பண்புகள் கொண்டுள்ளது என்று அப்போது தெரியாது. அண்மையில் ஊருக்குச் சென்றபோது சந்தையில் பார்த்து வாங்கி வந்தோம். இவற்றைப் பற்றி சித்தர்கள் கட்டாயம் அறிந்திருக்கக் கூடும். அவர்கள் எவ்வெவ் நோய்களுக்கு இவற்றைப் பயன்படுத்தினர் எனப் பார்க்க வேண்டும். ஆனால், நான் அறிந்த வரை இது விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. -- சுந்தர் \பேச்சு 02:59, 26 சூன் 2011 (UTC)Reply

கேள்வி தொகு

சுந்தர், அதளை (அதலை அல்ல அதளை) என்றால் ஒருவகைப் பீர்க்கு என்று ("நிலப்பீர்க்கு", "Species of bitter luffa" என்று தமிழ் பேரகராதியும், "நிலப் பீர்க்கு" என்று கழக அகராதியும் தருகின்றது). இந்த அதளையும் அதலையும் ஒன்றா வேறா?--செல்வா 19:55, 25 சூன் 2011 (UTC)Reply

அதள் என்றால் தோல், மரப்பட்டை என்றும் பொருள் உள்ளது. இதன் தோல் தடிப்பாக இருப்பதாலும் இப்பெயர் பெற்று இருக்கலாம். பீர்க்கு மிக வேகமாக வளர்ந்தாலும் பீர்க்கங்காயுக்கும் தோல் கெட்டியாகத் தடிப்பாகத் தான் இருக்கும். ஆகவே இது அதளை என்று இருக்க வேண்டுமோ என்று ஐயம் எழுகின்றது.--செல்வா 20:06, 25 சூன் 2011 (UTC)Reply
 
தேய்த்துக் குளிக்கப் பயன்படும் பீர்க்கு
அதலையும் அதளையும் ஒன்றா எனப் பார்க்க வேண்டும். கழக அகராதியின்படி அதளையும் வெள்ளெரிக்குடும்பத்தைச் சேர்ந்துள்ள செடி எனத் தெரிகிறது. அதுவும் நிலத்தில் படர்கிறது. ஆனால், நிலப்பீர்க்கு என்று சொல்லியிருப்பதால் சற்று ஐயம் எழுகிறது. நிலப்பீர்க்கு, மக்களும் மாக்களும் தேய்த்துக் குளிக்கப் பயன்படும் நார் நிறைந்த காய் என நினைக்கிறேன். வேறு தரவுகளிலும் தேடிப் பார்க்க வேண்டும். பேச்சில் சொல்வதைக் கேட்கையில் அதலைக்காய் அல்லது அதலக்காய் என்றே தோன்றுகிறது. உன்னித்துக் கேட்டதில்லை. -- சுந்தர் \பேச்சு 02:59, 26 சூன் 2011 (UTC)Reply
அதள் என்பது தடித்த தோலைக் குறிப்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். மீண்டும் பார்த்ததில் கழக அகராதியில் நிலப்பீர்க்கு luffa என்றும், அதளை bitter luffa என்றும் தந்துள்ளனர். இந்தச் செடியின் பழைய அறிவியற் பெயர் Luffa tuberosa என்று இருப்பதைப் பார்த்தால் அதளை வழக்கில் மருவி அதலையாகி இருக்க வாய்ப்பு உள்ளது. உறுதி செய்தால் தகவலைச் சேர்த்து விடலாம். -- சுந்தர் \பேச்சு 03:47, 26 சூன் 2011 (UTC)Reply

வரை பற்றி தொகு

  • இக் கட்டுரையில்
//காய்களின் கரும்பச்சை நிறப் புறத்தோலில் எட்டு நுண்ணிய வரைகள் இருக்கும்.//

என்ற வரிகள் உள்ளன. வரைகள் என்பதற்கு இங்கு என்ன பொருள்--Parvathisri 17:13, 30 சனவரி 2012 (UTC)Reply

நானும் முதலில் விரை தான் வரையாய் இருக்கிறதோ என எண்ணினேன். ”எந்தப் பக்கத்தையும் மறைக்கும் வரைகள்” என வரும் பாரதி வரிகளையும் உள்ளுக. வரை என்பது line எனும் பொருளில் இங்கு கையாளப்பட்டுள்ளது என எண்ணுகிறேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 04:42, 1 பெப்ரவரி 2012 (UTC)
இவ்வுரையாடலைக் கவனிக்கத் தவறிவிட்டேன். பார்வதி, கார்த்தி, சற்று மேடாக ஓடும் கோடு என்ற பொருளில் வரை எனப் பயன்படுத்தியுள்ளேன். வேறு பொருத்தமான சொல் இருந்தால் மாற்றிக் கொள்ளலாம். -- சுந்தர் \பேச்சு 08:49, 5 அக்டோபர் 2012 (UTC)Reply

வரை என்பது பொருத்தமாகவே உள்ளது சுந்தர். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 09:37, 5 அக்டோபர் 2012 (UTC)Reply

நன்றி கார்த்தி. -- சுந்தர் \பேச்சு 11:27, 6 அக்டோபர் 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அதலை&oldid=1226570" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அதலை" page.