பேச்சு:அளவீடு

அளவீடு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

அளவியல் பக்கத்துக்கு வழிமாற்றலாமா?--இரவி (பேச்சு) 13:11, 30 ஏப்ரல் 2012 (UTC)

அளவியல் என்ற தலைப்பிலிருந்த கட்டுரை, கீழ் வரும் உரையாடலின் பின்னர், அளவீடு என்ற தலைப்புக்கு வழிமாற்றம் செய்யப்பட்டது. அளவியல் தலைப்பில் இருந்த கட்டுரையின் தலைப்புப் பொருத்தமற்றது எனத் தோன்றியதால், அங்கு பேச்சுப் பக்கத்தில் உரையாடிவிட்டுப் பக்கத்தை நகர்த்தினேன். கட்டுரையினுள்ளே, அளவியல் என்ற சொல்லுக்கு உள்ளிணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. அளவியல் என்ற தலைப்பில் பின்னர் கட்டுரை ஆக்கப்படலாம் என்பதாலும், அளவியல் என்பது ஒரு துறையைக் குறிப்பதாலும், வழிமாற்றி இன்றியே நகர்த்தலைச் செய்தேன். ஆனால், நகர்த்திய பின்னர் இங்கு பேச்சுப் பக்கத்தில் பார்த்தபோது, ஏற்கனவே அளவீடு என இருந்த கட்டுரையே அளவியலுக்கு நகர்த்தப்பட்டிருக்கிறது எனத் தோன்றுகிறது. இது தொடர்பில் உரையாடிய பின்னர் முடிவெடுக்கலாம். தற்போதைக்கு இங்கேயே கட்டுரையை விட்டு வைக்கிறேன். @Semmal50 and Ravidreams: --கலை (பேச்சு) 13:40, 29 ஆகத்து 2017 (UTC)Reply

தலைப்புமாற்றக் கோரிக்கை தொகு

இந்தக் கட்டுரை Measurement என்ற ஆங்கிலக் கட்டுரைக்கு இணைக்கப்பட்டு, அதற்கான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது. இந்தக் கட்டுரையின் தலைப்பை அளவீடு அல்லது அளவை என மாற்றலாம் என நினைக்கிறேன். அளவியல் (Metrology) என்பதற்கு, இங்கே உள்ளிணைப்புக் கொடுத்து, அதற்கான வேறொரு கட்டுரையை உருவாக்கலாம். கருத்துக்கள் தேவை.--கலை (பேச்சு) 11:03, 29 ஆகத்து 2017 (UTC)Reply

அளவை என்னும் சொல் தர்க்கம் என்ற பொருளில் வழங்குகின்ற நல்ல தமிழ்ச் சொல் ஆகும். எனவே அளவை என்ற சொல்லை இங்கு பயன்படுத்துதல் தவறு. அளவியல் என்பது சரி. இதை விட அளவு என வழங்குதல் நல்லது. இயல் என்பது ஒரு துறையைக் குறித்துப் பயன்படுத்தி வருகிறோம். வேதியியல், தெரியியல், சமூகவியல்,அரசியல் எனப் பல துறைகள் உள்ளன. மெசர்மென்ட் என்பது ஒரு துறை அல்லது பிரிவைக் குறிக்கவில்லையே! ஆதலால் அளவுஎனப் பயன்படுத்தலே சாலச் சிறந்தது.--Semmal50 (பேச்சு) 11:20, 29 ஆகத்து 2017 (UTC)Reply

Semmal50! நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, அளவியல் என்பது ஒரு துறையைக் குறிப்பதனாலேயே இந்தக் கட்டுரையின் தலைப்புப் பொருத்தமற்றது என நினைத்து, இந்த உரையாடலை ஆரம்பித்தேன். உங்கள் கருத்துக்கு நன்றி. கட்டுரையின் நுட்பியல் சொற்கள் துணைத் தலைப்பின் கீழ் அளவு என்பதற்கு (Scale, Measure) என்று கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் விக்சனரியில், Measurement என்பதற்கு அளவை, அளவு, அளவீடு எனக் கொடுக்கப்பட்டுள்ளது. அளவை என்ற சொல் பொருத்தமற்றது எனில், அளவீடு என்பதை இந்தக் கட்டுரையின் தலைப்பாகப் பயன்படுத்தலாமா? இதன்மூலம் அளவு (Scale, Measure) என்பதுடன் வரக்கூடிய சொற்குழப்பத்தையும் தவிர்க்கலாம் என நினைக்கிறேன். உங்கள் கருத்தைக் கூறுங்கள்.--கலை (பேச்சு) 11:32, 29 ஆகத்து 2017 (UTC)Reply

அளவீடு என்னும் சொல் பொருத்தமாக உள்ளது. அதையே கட்டுரைத் தலைப்பாக மாற்றலாம். நன்றி.--Semmal50 (பேச்சு) 11:38, 29 ஆகத்து 2017 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அளவீடு&oldid=2409354" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அளவீடு" page.