இந்தக் கட்டுரை ஆரம்பத்தில் ஆமை என்ற தலைப்பில் en:turtle கட்டுரையை ஒட்டி எழுதப்பட்டிருந்தது. பின்னர் கூகுள் மொழிபெயர்ப்பாளர் இதே தலைப்பில் ஆமை என்ற தலைப்பில் en:Tortoise என்ற கட்டுரையை மொழிபெயர்த்து ஆரம்பக்கட்டுரையை அழித்து விட்டு எழுதியிருக்கிறார். turtle, tortoise போன்றவற்றுக்குத் தமிழ்ப் பெயர்கள் தெரிந்தவர்கள் தெரிவியுங்கள். இக்கட்டுரையை இரண்டாகப் பிரிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 02:52, 6 மே 2010 (UTC)Reply


ஆமைகள் வேறுபாடு தொகு

 
நீர் ஆமை(turtle)

உயிரியல் ரீதீயில் Turtle மற்றும் Tortoise வேறு பட்ட இனங்கள் ஆகும். இவ்விரண்டு இங்களுக்குமிடையே ஆன வித்தியாசத்தை ஆங்கிலத்தில்ிப்படி கூறுவர் a tortoise is a kind of a turtle, but not all turtles are tortoises.

நீர் ஆமை (Turtles): இவை பெரும்பாலும் நீரிலோ அல்லது நீர்நிலைகளை அடுத்தே வாழும். இவற்றின் கால் விறல்கள் ஒன்றுடன் ஒன்று பிண்ணப்பட்டு (webbed feat) இருக்கும். இவ்விறல்கள் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக இருக்கும். இவை தமது உடலின் வெப்பநிலையை கூட்ட சூரியவெளிச்சத்தில் நிற்கும் மற்றும் உடலின் வெப்பத்தை குறைக்க நீரீலோ அல்லது நீழலிலோ நிற்கும்.

 
நில ஆமை(tortoise)

நில ஆமை (Tortoises): இவை தன் வாழ்நாளின் பெரும்பகுதியை நிலத்திலேயே கழிக்கும். பெரும்பாலும் நீர் ஆமைகளைவிட உடலமைப்பில் பெரியவை (சில நீர் ஆமைகள் மிக பெரிய உருவ அமைப்பை பெற்றுள்ளதை நினைவில் கொள்ளவேண்டும்). இவற்றின் கால விறல்கள் நீர் ஆமையை போன்றூ பிண்ணப்பட்டவை அன்று; இவற்றின் விறல்கள் கட்டையான அமைப்பை உடையவை, மேலும் விறல்கள் கூர்மையான நகங்களை கொண்டிருக்கும். இவை நிலத்தில் அதிக தொலைவு நடக்க உதவியாக இருப்பவை. நில ஆமைகள் தமது உடலின் வெப்பநிலையை கூட்ட சூரியவெளிச்சத்தில் நிற்கும் மற்றும் உடலின் வெப்பத்தை குறைக்க மண்ணில் புதிந்தும் இருக்கும்.

இவை இரண்டும் இரண்டு வேறு இனக்குழுக்கள் ஆகையால் ஒவ்வொன்றுக்கும் தனி கட்டுரைகள் வேண்டும். 2000 வருடங்களாக நீர் மற்றும் நில ஆமைகளுடன் வாழ்ந்து வரும் சமுதாயத்திற்கு இவற்றின் வேறுபாடு தெரியாதது மிகவும் வருத்ததிற்குரியது. உலகில் அதிகளவில் நீர் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் இடம் தென் இந்தியா (குறிப்பாக தென் ஒரிசா, ஆந்திரம் மற்றும் தமிழக கடற்கரை) மற்றும் இலங்கையின் கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரைகள் ஆகும்--கார்த்திக் 07:02, 6 மே 2010 (UTC)Reply

சரியான பெயர்கள் தொகு

Kanags, ஆமைகளின் சரியான பெயர்களை இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆமை&oldid=2665652" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆமை" page.