பேச்சு:இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம்



ஒல்லாந்து என்பது இலங்கை வழக்கா? இந்தியாவில் டச்சு என்றுதான் படித்ததாக நினைவு--சண்முகம்ப7 (பேச்சு) 01:39, 30 ஆகத்து 2012 (UTC)Reply

இலங்கையில் பெரும்பாலும் (பாடப்புத்தகங்கள் உட்பட) ஒல்லாந்து (Holland) என்றே அழைக்கப்படுகின்றது. (இ)டச்சு என்பது குறைந்தளவு பாவனையில் உள்ளது.--Anton (பேச்சு) 01:51, 30 ஆகத்து 2012 (UTC)Reply
சரி அன்டன். பாஹிமுக்கு: தயவுசெய்து இதுபோல மாற்றும் போது ஒரு சில இடங்களில் டச்சு என்பதனையும் விட்டு வைக்கவும், அப்போதுதான் இந்தியத் தமிழர்களுக்கும் புரியும் :) (இதில் சோடாபாட்டில் சேர்த்துள்ளார் என நினைக்கிறேன்). மேலும் இது போன்றவற்றை முதலில் எழுதியவாறு விடுவதுதானே நடைமுறை--சண்முகம்ப7 (பேச்சு) 03:18, 30 ஆகத்து 2012 (UTC)Reply

சண்முகம், யான் அதனை மாற்றியதற்குக் காரணம் இலங்கை வழக்கன்று. மாறாக, டகரத்திற் தமிழ்ச் சொற்கள் தொடங்கலாகாது என்னும் இலக்கண விதிதான் காரணம்.--பாஹிம் (பேச்சு) 03:25, 30 ஆகத்து 2012 (UTC)Reply

அப்படியானாலும் இடச்சு என்றுதானே மாற்ற வேண்டும். சரி விடுங்கள் அது பெரிய பிரச்சினை அன்று. மேலே கூறியவற்றையும் நினைவில் கொள்ளவும். இந்த இலக்கண மாற்றங்கள் பற்றி ஏற்கனவே பல இடங்களில் உரையாடல் நடந்துள்ளது. கொள்கை முடிவு எடுக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன், நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 03:34, 30 ஆகத்து 2012 (UTC)Reply
மீண்டும் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி என மாற்றியுள்ளேன். எதையாவது மாற்றுவதானால் உரையாடி விட்டு மாற்றுங்கள் பாகிம்.--Kanags \உரையாடுக 08:09, 30 ஆகத்து 2012 (UTC)Reply
Return to "இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம்" page.