பேச்சு:இடைக்காடனார்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
தலா - தமிழ்ச் சொல்லா? இதற்குப் பதில் முறையே என்ற சொல்லை ஆளலாமா? வேறு சொற்கள் உண்டா? இன்னொரு ஐயம் - பதில் என்பது தமிழ்ச் சொல்லா? இதே ஒலிப்புடனும் பொருளுடனும் இந்தியில் ஒரு சொல்லைக் கேட்ட நினைவு--ரவி 17:23, 16 நவம்பர் 2007 (UTC)
- தலா தமிழ்ச்சொல்தான். "தலைக்கு" என்று பொருள் ("ஒரு தலைக்கு"). முறையே என்றும் ஆளலாம். ஒவ்வொரு xxக்கு, ஒரு xxக்கு என்றெல்லாமும் சொல்லலாம். பதில் தமிழ்ச்சொல் இல்லை. --செல்வா 17:37, 16 நவம்பர் 2007 (UTC)
நன்றி செல்வா. தலா - தலை தொடர்பை நானும் நினைத்துப் பார்த்திருந்தேன்--ரவி 17:48, 16 நவம்பர் 2007 (UTC)